24 வயது வித்தியாசம்: தந்தை வயது நபரை திருமணம் செய்துகொள்வது ஏன்? இளம்பெண் விளக்கம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தன்னை விட 24 வயது பெரியவரின் உடை அணியும் அழகில் மயங்கி திருமணம் செய்ய ஆயத்தமாகியுள்ளார்.

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தை சேர்ந்த நஜலா முஹம்மத் (24) என்கிற இளம்பெண், 2016ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் இரவு நேர கேளிக்கை விடுதி ஒன்றிற்கு சென்றுள்ளார்.

அங்கு தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி கொண்டிருந்த ஜான் மாலட் (48) என்பவரை சந்தித்துள்ளார். நண்பர்களாக பழக ஆரம்பித்த இருவருக்கும் இடையில் காதல் மலர்ந்துள்ளது. 24 வயது வித்யாசம் இருந்ததால், இதற்கு இரு குடும்பத்தினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

அதோடு மட்டுமின்றி ஜானிற்கு ஜெசிக்கா, 18, கார்ஸ்ஸா, 25, லாரன், 26, என நான்கு மகள்கள் இருக்கின்றனர். இதில் கார்ஸ்ஸா சுத்தமாக நஜலாவிடம் பேசுவதை தவிர்த்துள்ளார்.

ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தவர்கள் இருவரின் காதலை பார்த்துவிட்டு பின்னர் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேசியிருக்கும் நஜலா, ஜானை அந்த இரவு நேர விடுதியில் பார்க்கும் போது அவரது உடை அணியும் விதம் மிகவும் அழகாக இருந்தது. அதேபோல இசைக்கேற்றவாறு அவர் கொடுக்கும் நடன அசைவுகளும் என்னை மயக்கிவிட்டன. அவர் பழகுவதற்கு மிகவும் நல்ல இதயம் கொண்டவர் போல தெரிந்தார்.

இருவீட்டார் எதிர்ப்பு தெரிவித்தாலும் எங்களுடைய காதலை பார்த்துவிட்டு பிறகு ஒப்புக்கொண்டனர். 2017ம் ஆண்டு ஒரு முறை டேட்டிங் சென்றிருந்த போது தான் அவர் என்னிடம் காதலை கூறினார். எனக்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது. அவருக்கு ஒரு ஆண் குழந்தை வேண்டும் என என்னிடம் கேட்டார்.

இதற்கு அவருடைய 9 வயது மகள் தான் ஏற்பாடு செய்திருந்தார். நான் இப்பொது எங்கு வெளியில் சென்றாலும், அவருடைய மகள்களும் என்னுடன் மகிழ்ச்சியாக கலந்துகொள்கின்றனர் என தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்