16 வயது மாணவனுக்கு தனது நிர்வாண புகைப்படங்களை அனுப்பிய ஆசிரியை.... அதிர்ச்சியளிக்கும் பின்னணி

Report Print Raju Raju in அமெரிக்கா

அமெரிக்காவில் 16 வயது பள்ளி மாணவனுக்கு நிர்வாண புகைப்படங்களை அனுப்பியதோடு அவரிடம் தவறாக பேசி வந்த ஆசிரியை மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது.

நியூ ஜெர்சியில் உள்ள தனியார் பள்ளியில் மிச்சிலினா ஐச்சில் (30) என்ற பெண் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார்.

கடந்தாண்டு பிப்ரவரியில் இருந்து அக்டோபர் வரையிலான காலக்கட்டத்தில் தன்னிடம் படிக்கும் 16 வயது மாணவனுக்கு தன்னுடைய நிர்வாண புகைப்படங்களை ஐச்சில் செல்போன் மூலம் அனுப்பியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக அந்த மாணவனே புகார் அளித்தார். மேலும் ஆசிரியை தன்னிடம் மோசமாக பேசுவதாக கூறியிருந்தார்.

இதை தொடர்ந்து பொலிசார் ஐச்சிலை கடந்த அக்டோபரில் கைது செய்தனர்.

முதலில் தன் மீதான புகாரை மறுத்த ஐச்சில், தன்னுடைய செல்போனை மாணவர்கள் நைசாக திருடி அதிலிருந்த தன்னுடைய புகைப்படங்களை அனுப்பியதாக கூறினார்.

ஆனால் தொடர்ந்து நடைபெற்ற விசாரணையின் முடிவில் ஐச்சிலின் மீதான புகார்கள் தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.

ஐச்சில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கான தண்டனை விபரங்கள் ஜூலை மாதம் அறிவிக்கப்படவுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்