ரயிலில் சிக்கி இளம் நடிகை மரணம்: பொலிசார் விசாரணை!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் வளர்ந்து வரும் இளம் நடிகை ஒருவர் ரயிலில் சிக்கி உயிரிழந்த பரிதாப சம்பவம் நிகழ்ந்துள்ளது.

Brooklynஐச் சேர்ந்த இளம் நடிகையான Helen McDonald Phalon (21) Manhattan ரயில் நிலையத்தில் ரயிலில் சிக்கி உயிரிழந்தார்.

ரயில் நிலையத்தில் ரயிலை ஒட்டி நடந்த கொண்டிருக்கையில் அவரது உடை ரயிலில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டதால் அவர் உயிரிழந்ததாக கருதப்படுகிறது.

ரயில் நடைபாதையில் நடந்த அவரது உடை அல்லது உடல்பாகம் ரயிலில் மாட்டியதால் இழுத்துச் செல்லப்பட்ட Helenஇன் உடல் ரயிலுக்கடியில் இழுக்கப்பட்டது.

உடனடியாக ரயில் நிறுத்தப்பட்டு அவரை மீட்க எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றியடையவில்லை.சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

விபத்து குறித்து பொலிசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்