தன் மகனை கொலை செய்த குற்றவாளியை நோக்கி தாய் கூறிய வார்த்தை! கண்கலங்கிய நீதிமன்றம்

Report Print Vijay Amburore in அமெரிக்கா

அமெரிக்காவில் மகனை கொலை செய்த குற்றவாளியை மன்னித்து கட்டியணைக்க விரும்புவதாக தாய் ஒருவர் தன்னுடைய பாசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த வின்சென்ட் ரோட்ரிக்ஸ் என்கிற 23 வயது இளைஞர் கடந்த ஆண்டு ஜனவரி 23ம் திகதியன்று, ஹாக்கின்ஸ் என்கிற 17 வயது சிறுவனை சுட்டுக்கொலை செய்தது தொடர்பாக கைது செய்யப்பட்டான்.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், 2017ம் ஆண்டு 50 வயதுடைய நபர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திலும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது.

இந்த நிலையில் குற்றவாளிக்கு ஜாமீனில் வெளிவர முடியாத வாழ்நாள் சிறைத்தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.

அப்போது குற்றவாளியை நோக்கிய பேசிய ஹாக்கின்ஸ் தாயார், "நான் உன்னை மன்னிக்க வேண்டும். என் இதயத்தின் கீழிருந்து நான் உன்னை மன்னித்துவிட்டேன்".

ஒரு தாயாக, நீ எனக்கு ஒரு குழந்தை. என் இதயத்தில், உன் மேல் எந்த கோபமோ கசப்போ எனக்கு இல்லை.

ஒரு அம்மாவாக நான் உன்னை கட்டியணைக்க விரும்புகிறேன் என கண்கலங்கியபடியே பேசியுள்ளார்.

இதன் பிறகு கலக்கத்துடன் பேசிய குற்றவாளி, நான் உங்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறேன் ஹாக்கின்ஸ் என பதிலளித்துள்ளான்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்