கடத்தப்பட்டு 11 ஆண்டுகள் கொடூர துஸ்பிரயோகத்திற்கு இரையான இளம்பெண்: இப்போது அவரின் நிலை தெரியுமா?

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் மர்ம நபரால் கடத்தப்பட்டு 11 ஆண்டுகள் கொடூர துஸ்பிரயோகத்திற்கு இரையான பெண் ஒருவர் தற்போது புதிய வாழ்க்கை வாழ்வதாக மனம் திறந்துள்ளார்.

ஓஹியோ மாகாணத்தின் க்ளீவ்லேன்ட் பகுதியில் குடியிருந்து வருபவர், தற்போது 38 வயதாகும் லில்லி ரோஸ் லீ.

இவரையே ஏரியல் காஸ்ட்ரோ என்பவர் கடத்திச் சென்று ஆள் ஆரவாரமற்ற குடிசை ஒன்றில் சிறை வைக்கப்பட்டு நீண்ட 11 ஆண்டுகள் துஸ்பிரயோகம் செய்துள்ளார்.

இந்த 11 ஆண்டுகளில் லில்லி பலமுறை கருக்கலைப்புக்கு உள்ளானார் என்பது மட்டுமல்ல, லில்லியின் வயிற்றில் மிதித்து கொடுமைப் படுத்தியும் உள்ளார்.

இந்த கொடூர சித்திரவதை காரணமாக தற்போது லில்லியால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுமார் 4,000 நாட்கள் ஏரியல் காஸ்ட்ரோவின் சித்திரவதைகளை அனுபவித்த லில்லி பொலிசாரால் மீட்கப்பட்ட பின்னர், தற்போது தமது வாழ்க்கையை புதுப்பித்து வருவதாக தெரிவித்துள்ளார்.

கடந்த 2002 ஆம் ஆண்டு, லில்லிக்கு 21 வயதாக இருக்கும் போது காஸ்ட்ரோவின் பொய்களுக்கு மயங்கி, அவரது குடியிருப்புக்கு சென்றுள்ளார்.

ஆனால் அதன் பின்னர் லில்லியின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. தினசரி துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டார். கடுமையாக தாக்குதலுக்கு இரையானார். விஷம் கலந்த உணவை சாப்பிட வைக்கப்பட்டார்.

இந்த 11 ஆண்டுகளில் லில்லி 5 முறை கர்ப்பமானார், ஆனால் காஸ்ட்ரோவால் கொடூரமாக தாக்கப்பட்டு கருக்கலைப்பு செய்யப்பட்டது.

லில்லியுடன் கடத்தப்பட்ட இன்னொரு இளம்பெண்ணின் கடின முயற்சியால் பொலிசருக்கு இந்த தகவல் 2013 ஆம் ஆண்டு தெரியவரவே, இரு பெண்களையும் பொலிசார் மீட்டனர்.

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஏரியல் காஸ்ட்ரோவுக்கு 2013 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 1,000 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

ஆனால் செப்டம்பர் மாதம் சிறைக்குள்ளேயே தூக்கிட்டு காஸ்ட்ரோ தற்கொலை செய்துகொண்டதாக பொலிசார் தகவல் தெரிவித்தனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...