ஈரான் மீது தாக்குதல் நடத்தியது அமெரிக்கா.. டிரம்ப் ரகசிய அங்கீகாரம்: சத்தமில்லாமல் நடந்த சம்பவம்

Report Print Basu in அமெரிக்கா

ஈரான் மீது சைபர் தாக்குதல் ஆதாவது இணைய தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்கா அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அமெரிக்கா இராணுவம், ஈரானிய ஏவுகணை கட்டுப்பாட்டு அமைப்புகள் மற்றும் உளவு வலையமைப்பிற்கு எதிராக சைபர் தாக்குதல்களை நடத்தியது என்று அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க கண்காணிப்பு ஆளில்லா விமானத்தை ஈரான் வீழ்த்திய பின்னர் இந்த சைபர் தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதாக அமெரிக்கா தரப்பில் தெரவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க விமானம் வீழ்த்தப்பட்ட பின்னர், ஈரான் மீது பதிலடி கொடுக்கும் வகையில் சைபர் தாக்குதலை நடத்த ஜனாதிபதி டிரம்ப் ரகசியமாக அங்கீகாரம் அளித்ததாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஈரான் மீதான இணைய தாக்குதலை உறுதிப்படுத்தும் வகையில் அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதிகரித்து வரும் பதட்டங்களுக்கு மத்தியில் பல வாரங்களாக உருவாக்கப்பட்ட ஒரு தற்செயல் திட்டம் இது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், ஈரானிய ராக்கெட் மற்றும் ஏவுகணைகளை கட்டுப்படுத்தும் கணினி அமைப்புகள் முடக்கப்பட்டது என அமெரிக்கா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிகக்காவின் கூற்றுகளுக்கு ஈரானில் உடனடியாக எந்த எதிர்வினையாற்ற வில்லை.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்