பெற்றோரின் கண் முன்னேயே பிள்ளைகளை கடத்த முயன்ற பெண்: ஒரு அதிர்ச்சி வீடியோ!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்காவில் பெற்றோர் கண் முன்னாலேயே ஒரு பெண் அவர்களது பிள்ளைகளைக் கடத்த முயலும் காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Atlanta விமான நிலையம் ஒன்றில் குழந்தைகளைக் கடத்த முயன்றதாக Esther Daniels (26) என்ற பெண் பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

விமான நிலையத்திற்குள் குழந்தைகளுடன் வரும் ஒரு தாய் தள்ளு வண்டியில் வைத்திருக்கும் குழந்தையை பறிக்க முயல்கிறார் Esther என்னும் அந்த பெண்.

குழந்தையின் தாய் அந்த குழந்தையை காப்பாற்ற முயலும்போது, அந்த குழந்தையை விட்டு விட்டு இன்னொரு குழந்தையை பறித்துக்கொண்டு ஓட முயல்கிறார்.

தற்செயலாக திரும்பிப் பார்க்கும் தந்தை குழந்தைகளை காப்பாற்ற ஓட, அவர் வந்த பின்னரும் விடாமல் குழந்தையை பறித்துக் கொண்டு ஓடுவதிலேயே குறியாக இருக்கிறார் Esther என்னும் அந்த பெண்.

தூரத்திலிருந்து நடப்பதை கவனித்த ஒரு பெண் பொலிஸ் அதிகாரி ஓடி வந்து குழந்தையை காப்பாற்ற முயலும்போது, அங்கிருந்து தப்பியோடுகிறார் Esther.

விமான நிலையத்திலிருந்த மற்ற பொலிசாரும் சேர்ந்து கொள்ள, அனைவருமாக முரண்டு பிடிக்கும் Estherஐ கைது செய்கின்றனர்.

விசாரணையில் Esther சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர் என்று தெரியவந்துள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்