மாதவிடாய் நிற்கபோவதாக நினைத்த பெண்.. அவருக்கு காத்திருந்த நம்பமுடியாத ஆச்சரியம்!

Report Print Raju Raju in அமெரிக்கா
144Shares

அமெரிக்காவில் இறுதி மாதவிடாய் நடைபெற போவதாக நினைத்திருந்த பெண் கர்ப்பமாக இருப்பதை கண்டு ஆச்சர்யம் கலந்து மகிழ்ச்சியில் ஆழ்ந்தார்.

மோனிகா தாம்சன் (46) என்ற பெண் பல ஆண்டுகளாக குழந்தை பெற முயற்சித்தும் அவரால் கருத்தரிக்க முடியவில்லை.

இந்நிலையில் திடீரென மோனிகா தனது உடலில் மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தார்.

இதையடுத்து தனக்கு மாதவிடாய் நிற்கபோவதாக நினைத்தார், அந்த சூழலில் அவருக்கு வாந்தியும், குமட்டலும் ஏற்பட்டது.

பின்னர் மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்த போது அவர் ஏழு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

இதை தொடர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் அவருக்கு குறை பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது குழந்தை ஜேய்டன் ஆண்டனி பிறந்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டது.

மோனிகா கூறுகையில், நானும் பல ஆண்டுகள் கருத்தரிக்க முயன்றும் அது முடியவில்லை, இனி எனக்கு குழந்தை பிறக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு வந்துவிட்டேன்.

ஆனால் நான் கர்ப்பமாக இருப்பதாக திடீரென மருத்துவர்கள் சொன்னது எனக்கு ஒருசேர அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் கொடுத்தது.

முதலில் என்னால் இதை நம்பமுடியவில்லை, பிறகு மருத்துவர்கள் உறுதியாக கூறியதால் நம்பினேன், ஏனெனில் கர்ப்பமாக இருந்தும் என் வயிறு பெரிதாக வீங்கவில்லை, தற்போது தான் முழுமையானவளாக என்னை உணர்கிறேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்