புறப்பட்ட உடனே தீப்பற்றி எரிந்து சாம்பலான விமானம்!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

கலிபோர்னியா மாகாணத்தில் 10 பேருடன் புறப்பட்ட இரட்டை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகியுள்ளது.

கலிபோர்னியா மாகாணத்தின் ஓரோவில்லிலிருந்து இரட்டை எஞ்சின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று, நேற்று மதியம் இரண்டு விமானிகள் மற்றும் 8 பயணிகளுடன் ஓரிகானில் உள்ள போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையம் நோக்கி புறப்பட்டது.

அடுத்த சில வினாடிகளில் ஓடுதள பாதையை விட்டு விலகி உலர்ந்த புற்களில் பாய்ந்து தீப்பிடிக்க ஆரம்பித்துள்ளது.

இதனையடுத்து வேகமாக விரைந்த முதல் தீயணைப்பு வாகனம், உள்ளிருந்த அனைவரையும் பத்திரமாக மீட்டது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கவுண்டி தீயணைப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் ரிக் கார்ஹார்ட் கூறியுள்ளார்.

மேலும், விமானத்தில் தீப்பிடித்தது ஓடுபாதையை விட்டு வெளியேறுவதற்கு முன்பா அல்லது பின்னரா என்பது பற்றி தனக்கு தெரியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

விமானம் புறப்படும்போது சிக்கல்கள் இருந்ததாகவும், அதன் விளைவாக தீப்பிடித்திருக்கலாம் என பொலிஸார் ஜோ டீல் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்