ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் கொடூர கொலை... குற்றவாளிக்கு மரணதண்டனை!

Report Print Vijay Amburore in அமெரிக்கா
267Shares

டெக்சாஸில் தனது முன்னாள் மனைவியின் குடும்பத்தைச் சேர்ந்த நான்கு குழந்தைகள் உட்பட 6 பேரை படுகொலை செய்த நபருக்கு மரணதண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தை சேர்ந்த ரொனால்ட் லீ ஹாஸ்கெல் என்கிற 39 வயது நபரை, அவருடைய மனைவி மெலனி லியோன் கடந்த 2014ம் ஆண்டு ராஜினாமா செய்தார்.

இதனால் ஆத்திரமடைந்த அவர், விவாகரத்து பெறுவதற்காக தன்னுடைய மனைவிக்கு உதவி செய்த அனைவரையும் கொலை செய்ய முடிவெடுத்தார்.

இதற்காக கலிபோர்னியாவில் இருந்து டெக்சாஸ் மாகாணத்திற்கு டெலிவரி பையன் போல சென்றுள்ளார். அங்கு மெலனி லியோனின் சகோதரி கேட்டி (34), அவருடைய கணவர் ஸ்டீபன் ஸ்டே (39) மற்றும் தம்பதியினரின் 4 குழந்தைகளை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்துள்ளார்.

5-வதாக தம்பதியினரின் 15 வயது சிறுமியை துப்பாக்கியால் சுட்டுள்ளார். தலையில் பலத்த காயமடைந்த அந்த சிறுமி மட்டும் தீவிர சிகிச்சைக்கு பின் உயிர்பிழைத்தது.

இந்த நிலையில் வழக்கின் இறுதிக்கட்ட விசாரணையை கேட்டறிந்த நீதிபதி, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்