காதலியுடன் நெருக்கமாக இருக்கும்போது ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தவருக்கு நேர்ந்த கதி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

ப்ளோரிடாவில், ஒருவர் தனது காதலியுடன் படுக்கையில் நெருக்கமாக இருக்கும்போது, அரை நிர்வாண மனிதர் ஒருவர் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்துள்ளார்.

ப்ளோரிடாவில் Victor Vickery(30) என்பவர் தனது காதலியுடன் நெருக்கமாக இருக்கும்போது, ஜன்னலில் ஏதோ சத்தம் கேட்டுள்ளது.

வெளியே வந்து பார்க்கும்போது, Asaad Akar (57) என்னும் ஒருவர் அரை நிர்வாண நிலையில் ஜன்னலுக்கு வெளியே நின்று வீட்டுக்குள் எட்டிப்பார்ப்பதைக் கண்டிருக்கிறார் அவர்.

உடனே அவரை கடுமையாக தாக்கியுள்ளார் Victor.

பொலிசாரை அழைத்த நிலையிலும், Victor, Asaadஐ தாக்க பொலிசார் தொலைபேசியில் அவரை தாக்கவேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள்.

பின்னர் Asaad தப்பியோட முயல, அவரைத் துரத்திப் பிடித்த Victor, அவரை தலையில் பலமாக தாக்கியதோடு, கழுத்தையும் நெறித்திருக்கிறார்.

பொலிசார் வந்து பார்க்கும்போது Victor கையிலும் உடையிலும் உலர்ந்த இரத்தம் இருப்பதைக் கண்டுள்ளார்கள்.

Asaad மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், இரண்டு மணி நேரத்திற்குப்பின் உயிரிழந்துள்ளார்.

கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டுள்ள Victor மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்