விமானத்திலேயே குழந்தை பெற்றெடுத்த பெண்: என்ன பெயர் வைத்துள்ளார் தெரியுமா?

Report Print Balamanuvelan in அமெரிக்கா

அமெரிக்க விமானம் ஒன்றில் பயணித்துக்கொண்டிருக்கும்போது பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட, விமானத்திலேயே அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

மூன்று குழந்தைகளின் தாயாகிய ப்ளோரிடாவைச் சேர்ந்த Nereida Araujo என்னும் பெண், டாம்பாவிலிருந்து பெனிசில்வேனியாவுக்கு அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தார்.

அவர் 38 வாரங்கள் கர்ப்பமாக இருந்தார், விமானத்தில் பயணிக்க மருத்துவர்களும் அவருக்கு அனுமதியளித்திருந்தார்கள்.

ஆனால் எதிர்பாராத விதமாக முன்கூட்டியே அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. விமானத்தை விமானிகள் விரைவாக வட கரோலினா விமான நிலையத்தில் நிறுத்த, தயாராக இருந்த மருத்துவ உதவிக்குழுவினர் விமானத்தில் ஏறி Nereida பிரசவிக்க உதவி செய்துள்ளார்கள்.

2 மணியளவில் Nereida அழகான பெண் குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார்.

தாயும் குழந்தையும் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். எனக்கு உதவிய எல்லோரையுமே ஹீரோக்களாக பார்க்கிறேன், வாழ்நாள் முழுவதும் அவர்கள் செய்ததை மறக்கமுடியாது என்கிறார் Nereida.

வானத்தில் பிரசவ வலி வந்து, விமானத்தில் பிறந்த குழந்தைக்கு, Lizyana Sky Taylor என்று பெயர் வைத்துள்ளார்கள் அதன் பெற்றோர்.

அவளை Sky என்று அழைக்கப்போகிறோம் என்கிறார் Nereida.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்