வீட்டிலேயே அணு உலை தயாரித்த நபர்: காயமடைந்ததாக பொலிசாரை அழைத்ததால் பரபரப்பு!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
103Shares

தான் வீட்டிலேயே அணு உலை தயாரித்ததாகவும், அப்போது ஏற்பட்ட விபத்தில் தனக்கு தீக்காயம் ஏற்பட்டதாகவும் ஒருவர் பொலிசாருக்கு தகவலளிக்க, அதிர்ந்துபோன பொலிசார், உடனடியாக அப்பகுதியிலுள்ள 40 வீடுகளில் உள்ளவர்களை அப்புறப்படுத்தினர்.

நேற்று இரவு, அமெரிக்காவின் கொலம்பஸ் பகுதியைச் சேர்ந்த ஒருவர் 911 அவசர உதவி எண்ணை அழைத்து, தான் தனது வீட்டின் பின்புறம் அணு உலை ஒன்றை தயாரித்து வந்ததாகவும், அதில் ஏற்பட்ட தீவிபத்தில் தனக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, தனக்கு உதவி தேவை என்று கூறியுள்ளார்.

'quantum physics generator' ஒன்றை தயாரித்ததாகவும், ஆல்பா கதிர்கள் உருவாகியுள்ளதாகவும் அவர் கூற, அதிர்ந்துபோன பொலிசார், உடனடியாக, வெடிகுண்டு நிபுணர்கள் அடங்கிய ஒரு குழு, ரசாயன பொருட்களால் தீ ஏற்பட்டால் அதை அணைப்பதற்கான சிறப்பு வீரர்கள் மற்றும் மருத்துவ உதவிக்குழுவினருடன் அவர் குறிப்பிட்ட பகுதிக்கு விரைந்தனர்.

அந்த பகுதியில் அமைந்துள்ள 40க்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ளவர்கள் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

அவர் மீது அணுக்கதிர் வீச்சு உள்ளதா என அதிகாரிகள் ஆராய்ந்து, இல்லை என தெரியவந்ததையடுத்து நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து அப்பகுதியில் அணுக்கதிர் வீச்சு உள்ளதா என ஆய்வு செய்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்