மார்பக அறுவை சிகிச்சை... 18 வயது இளம் பெண்ணுக்கு நேர்ந்த கதி! என்ன நடந்தது தெரியுமா?

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் மார்பக அறுவை சிகிச்சை செய்த 18 வயது இளம் பெண், தற்போது கோமா நிலையில் இருப்பதால் பெற்றோர் மிகவும் வேதனையில் உள்ளனர்.

அமெரிக்காவின் Colorado நகரத்தின் Thornton பகுதியை சேர்ந்தவர் Emmalyn Nguyen. 18 வயதான இவர் இந்த கோடையில் தான் உயர்நிலை பட்டம் பெற்றார்.

இதையடுத்து அவர் தன்னுடைய நம்பிக்கையை அதிகரிப்பதற்காகவும், அழகிற்காகவும் கடந்த ஆகஸ்ட் மாதம் மார்பக அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சிகிச்சைக்கு பின்னர் அவர் முன்பு போல் எழவேயில்லை, இதனால் சரியாக பேச முடியாமல் இருந்துள்ளார். இந்த தகவல் உடனடியாக பெற்றோருக்கு தெரியவர அவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

இது கோமாவின் ஒரு நிலை என்று கூறப்படுகிறது. தன் மகளின் நிலைக்கு மருத்துவர்கள் தான் காரணம் என்று Arapahoe County நீதிமன்றத்தில் மருத்துவர் Geoffrey Kim மற்றும் செவிலியர் Rex Meeker ஆகியோர் மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

CBS4

Emmalyn Nguyen கூறுகையில், அவள் உடல் இங்கிருக்கிறது, ஆனால் அவள் இங்கில்லை, நாங்கள் அவளை இழந்துவிட்டது போன்று நினைப்பதாக வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும் அவரின் தந்தை, நான் இதில் என்ன நடந்தது என்பதை கண்டுபிடிக்க விரும்புகிறேன், ஏனெனில் இது மற்றவர்களுக்கும் நடக்க வாய்ப்பிருக்கிறது என்று கூறியுள்ளார்.

குறித்த சிகிச்சையின் போது அறுவைசிகிச்சைக்கு முன் அதற்கான வழிமுறைகளை பின்பற்றியிருக்கும் போது, Emmalyn Nguyen-க்கு மாரடைப்பு வந்திருக்கலாம், இதனால் சுவாசிப்பது நின்றிருக்கலாம் என்று பெற்றோர் சந்தேகிப்பதாக அங்கிருக்கும் உள்ளூர் ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்