ஈரானுடன் போர் வேண்டாம்! சூளுரைத்த அமெரிக்க மக்கள் மேற்கொண்ட செயல்

Report Print Raju Raju in அமெரிக்கா

ஈரானுடன் போர் வேண்டாம் என கூறி அமெரிக்காவின் நியூயோர்க் மக்கள் பேரணி சென்றனர்.

ஈரான் படையின் தளபதி குவாசிம் சுலைமானைக் கடந்த 3-ம் திகதி அமெரிக்க இராணுவத்தால் கொல்லப்பட்டார்.

இந்தத் தாக்குதலுக்கு பழிக்குப் பழி வாங்குவோம் என்று ஈரான் அரசு சூளுரைத்துள்ளது.

இந்த சூழலில் ஈராக்கின் பாக்தாத் அருகே இருக்கும் அமெரிக்க இராணுவ தளம் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதோடு அதில் 80 அமெரிக்க வீரர்கள் இறந்ததாக கூறியது.

இதன் காரணமாக ஈரான் - அமெரிக்கா இடையே பதற்றம் நிலவுகிறது.

இந்நிலையில் அமெரிக்கா - ஈரான் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்க வலியுறுத்தி நியூயோர்க்கில் நூற்றுக்கணக்கான மக்கள் பேரணி சென்றனர்.

மன்ஹாட்டன் சதுக்கத்தின் அருகே கூடிய மக்கள் ஈரான் - அமெரிக்கா இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தை குறைக்க பதாகைகள் ஏந்தி பேரணி சென்றனர்.

அப்போது ஈரானுடன் போர் வேண்டாம், ஈரான் மீது பொருளாதாரத் தடைக விதிக்க வேண்டாம் போன்ற கோஷங்களை பேரணியில் கலந்து கொண்டவர்கள் முன்வைத்தார்கள்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்