டொனால்ட் டிரம்பின் மார்-எ-லாகோ ரிசார்ட்டுக்கு வடக்கே உள்ள பாலத்தில் கோடாரி உள்ளிட்ட ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ஈரானிய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மார்-எ-லாகோ ரிசார்ட்டுக்கு வடக்கே ஒரு பாலத்தில் பல கத்திகளுடன் ஆயுதம் ஏந்திய ஒருவரை கைது செய்ததாக புளோரிடா மாகாண பொலிஸார் தெரிவித்துள்ளனர். அவர் ஈரானிய நாட்டவர் என்று உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அந்த நபருக்கு அறியப்பட்ட முகவரி எதுவும் இல்லை. வெள்ளிக்கிழமை காலை Flagler நினைவு பாலத்தில் கைது செய்யப்பட்டார். WPTV படி, அவரிடம் “பல கத்திகள்” மற்றும் வெளியிடப்படாத அளவு பணம் இருந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு துணி, இரண்டு கத்திகள், ஒரு பிக் கோடரி மற்றும் 2,200 டொலர் பணம் வைத்திருந்ததாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், Palm Beach சர்வதேச விமான நிலையத்தில் கண்டெடுக்கப்பட்ட அவரது வாகனத்தை வெடிகுண்டு நிபுணர் குழு சோதனையிட்டு வருகிறது.
பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் இஸ்லாமிய புரட்சிகர காவல்படைப் படை தளபதி குவாசிம் சுலைமானி அமெரிக்க ட்ரோன் தாக்குதலுக்கு பழிவாங்கும் விதமாக, ஈராக்கில் உள்ள இரண்டு அமெரிக்க தளங்களில் ஈரான் ஏவுகணைகளை வீசிய சில நாட்களுக்கு பின்னர் இந்த கைது நடைபெறுகிறது.

டிரம்பை கொலை செய்பவர்களுக்கு, 80 மில்லியன் டாலர் பவுண்டரி பணம் வழங்கப்படும் என ஈரான் அறிவித்ததாக தவறான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. ஆனால் அந்த அறிக்கைகள் உண்மையான அரசாங்க அறிக்கைகள் இல்லை, சுலைமானியின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட ஒரு தனிநபர் கூறிய கருத்துக்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக டிரம்ப் வார இறுதி நாட்களிலும் விடுமுறை நாட்களிலும் மார்-எ-லாகோ ரிசார்ட்டில் தங்கி ஓய்வெடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.