அமெரிக்காவில் மதுபான ஆலையில் துப்பாக்கி சூடு: 7 பேர் பலி..!

Report Print Vijay Amburore in அமெரிக்கா

விஸ்கொன்சின் மாகாணத்தில் உள்ள மில்லர்கூர்ஸ் பீர் காய்ச்சும் நிறுவனத்தில், மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூடு தாக்குதலில் 6 பேர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மில்வாக்கியில் உள்ள மில்லர்கூர்ஸ் பீர் காய்ச்சும் தலைமை நிறுவனத்தில் புதன்கிழமை பிற்பகல் மர்ம நபர் தீவிரமான துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளார்.

இதில் சந்தேகநபர் உட்பட 7 பேர் இறந்துவிட்டதாக மில்வாக்கி ஜர்னல் சென்டினல் தெரிவித்துள்ளது. சந்தேக நபர் முன்னாள் ஊழியர் என்று கூறப்படுகிறது.

காயமடைந்த அல்லது கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிர் பிழைத்தவர்களின் காயங்களின் தீவிரத்தை பொலிஸார் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

உள்ளூர் நேரப்படி புதன்கிழமை பிற்பகல் 2 மணிக்குப் பிறகு இந்த சம்பவம் நடந்துள்ளது. இந்த ஆலையில் சுமார் 1,400 பேர் பணியாற்றுகின்றனர். 700 க்கும் மேற்பட்டவர்கள் அதன் மதுபான உற்பத்தி நிலையத்திலும், 600 க்கும் மேற்பட்டோர் அதன் நிறுவன அலுவலகங்களிலும் பணியாற்றுகின்றனர்.

கட்டிடத்தில் சிக்கியிருக்கும் ஊழியர்கள் சிலர் வெளியில் இருக்கும் தங்களுடைய உறவினர்களுக்கு குறுஞ்செய்தியின் மூலம் தகவல் கொடுத்துள்ளனர்.

இந்த சம்பவத்தை அடுத்து அங்கு குவிந்திருக்கும் பொலிஸார், பொதுமக்கள் அப்பகுதியை தவிர்க்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்