ரிலாக்ஸ் மக்களே! இதுவும் கடந்து போகும்: நாட்டு மக்களை உற்சாகப்படுத்தியுள்ள டிரம்ப்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

என்னென்னவோ பார்த்துவிட்டோம், அவற்றைப்போலவே இதுவும் கடந்துபோகும், ரிலாக்ஸ் மக்களே என்று அமெரிக்க மக்களை உற்சாகப்படுத்தியுள்ளார் அதிபர் டிரம்ப்.

அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 3,500ஐ நெருங்கி, பலி எண்ணிக்கை 63ஆகிவிட்ட நிலையில், பயந்து, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் குவிக்கவேண்டாம் என அமெரிக்க மக்களை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாம் மிகவும் நன்றாக இருக்கப்போகிறோம், ரிலாக்ஸ், இதுவும் கடந்துபோகும் என்று அமெரிக்க மக்களை உற்சாகப்படுத்தும் விதத்தில் பேசினார் ட்ரம்ப்.

இவ்வளவு பொருட்களை வாங்கிக் குவிக்கவேண்டாம், டேக் இட் ஈஸி, ரிலாக்ஸ் என்றார் அவர்.

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நாட்டின் முக்கிய நபர்களிடம் பேசியுள்ளதாக தெரிவித்த டிரம்ப், உங்கள் கடைகள் எப்போதுமே திறந்தே இருக்கும்.

அதனால் அமெரிக்க குடும்பங்கள் தைரியமாக இருக்கலாம். ஒரு வாரத்திற்கு என்ன தேவையோ அதை மட்டும் வாங்குங்கள்.

இப்போது, மொத்தமாக கடைகளை சூறையாடவேண்டாம் என்றார் அவர்.

உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை விநியோகிக்கும் நாட்டின் முக்கிய நபர்களிடம் தான் பேசியபோது, உங்கள் மக்களிடம், உணவுப்பொருட்களை வாங்குங்கள், என்ஜாய் செய்து உண்ணுங்கள், ரிலாக்ஸ் செய்யுங்கள், ஏனென்றால் நம்மிடம் நிறைய பொருட்கள் இருக்கின்றன என்று கூற முடியுமா என்று அவர்கள் கேட்டுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

உண்மையில் அவர்கள் என்னிடம், கொஞ்சம் குறைவாக வாங்க முடியுமா என்று கேட்டார்கள் என்று கூறிய ட்ரம்ப், வியாபாரிகளிடமிருந்து இப்படி ஒரு கோரிக்கை வரும் என நான் கொஞ்சம் கூட எண்ணியதில்லை என்று கூற பத்திரிகையாளர்கள் கூட்டத்தில் சிரிப்பலை எழுந்து அமர்ந்தது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்