வீட்டிற்குள்ளேயே இருங்கள்... சடலங்களின் படங்களை வெளியிட்டு மக்களிடம் கோரிக்கை வைத்த செவிலியர்

Report Print Vijay Amburore in அமெரிக்கா
2232Shares

கொரோனா நோய்த்தொற்றினால் உயிரிழந்தவர்களின் சடலங்களை இணையத்தில் பகிர்ந்து அமெரிக்காவை சேர்ந்த ஒரு செவிலியர் வேதனை தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் பேரழிவை ஏற்படுத்தி வரும் கொடிய கொரோனா வைரஸால் உலகெங்கிலும் இதுவரை 35000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 738,987 ஆக அதிகரித்துள்ளது.

அதிலும் குறிப்பாக அமெரிக்காவில் 142,793 பேர் பாதிக்கப்பட்டிருப்பதோடு, வைரஸ் தாக்குதலின் மையமாக மாறி வருகிறது.

இந்த நிலையில், ப்ரூக்ளின் மருத்துவமனைக்கு வெளியே உள்ள தெருவில் கோரோனா வைரஸ் தாக்குதலால் உயிரிழந்தவர்களின் சடலங்கள் ஃபோர்க்லிஃப்ட் மூலம் குளிரூட்டப்பட்ட ஒரு காரில் ஏற்றப்படுகிறது.

இதனை அங்கு பணிபுரியும் ஒரு செவிலியர் புகைப்படம் எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளார். 'இது உண்மையானது', ' தீவிரமாக எடுத்துக் கொண்டு வீட்டிற்குள்ளேயே இருங்கள்', என பொதுமக்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அமெரிக்காவில் உள்ள கொரோனா வைரஸின் 'கொடூரமான யதார்த்தத்தை' மக்களுக்குக் காண்பிப்பதற்காகவே இந்த படங்களை எடுத்ததாக 38 வயதான அந்த செவிலியர் கூறியுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்