அரிசோனாவில் துப்பாக்கிச்சூடு... மூவர் காயம்: தீவிரவாதி சரண்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

புதிய இணைப்பு

அரிசோனாவில் துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் வெளியிட்டதாக கூறப்படும் வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது.

அந்த வீடியோவில், ஹலோ, என் பெயர் Armando Junior Hernandez, நான் 2020ஆம் ஆண்டின் shooter of Westgate ஆகப்போகிறேன் என்று கூறுகிறார் அந்த நபர்.

தனது காரில் தான் வைத்திருக்கும் துப்பாக்கிகளையும் காட்டும் அவர், வேலையை முடிப்போம் என்கிறார்.

பொலிசார் அவரது அடையாளத்தை வெளியிடாத நிலையில், அவரது தாயார் அவரை அடையாள காட்டியுள்ளார்.

அவர் பெயர் Armando Hernandez என்றும், அவருக்கு 20 வயதாகிறது என்றும் அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

அரிசோனாவில் ஷாப்பிங் மால் ஒன்றில் தீவிரவாதி ஒருவர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

செனேட்டர் Martín Quezada என்பவர், கையில் AR-15 ரக துப்பாக்கியுடன் துப்பாக்கிச்சூடு நடத்திய தீவிரவாதி ஒருவரை தான் கண்ணால் கண்டதாக ட்வீட் செய்திருந்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு அமைதியாக நடந்தபடி, அந்த நபர் மீண்டும் தனது துப்பாக்கியை லோட் செய்ததை தான் கண்டதாகவும், துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமடைந்ததாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையில், பொலிசார் மூவர் சுடப்பட்டதாகவும், அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் மற்ற இருவர் குணமடைந்துவிடுவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், துப்பாக்கியால் சுட்ட நபர் பொலிசாரிடம் சரணடைந்துவிட்டதாகவும், அவர் தற்போது காவலில் இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்