ஜூம் வீடியோ அழைப்பில் நேரலையான முதல் கொலை... தந்தையை பழி தீர்த்த மகன்: நடுங்க வைத்த சம்பவம்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

அமெரிக்காவில் ஜூம் வீடியோ அழைப்பில் 20க்கும் மேற்பட்டவருடன் உரையாடி கொண்டிருந்த தந்தையை திடீரென அவரது மகன் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த சம்பவத்தை நேரலையில் பார்த்து பலரும் அதிர்ச்சி அடைந்த நிலையில் அதில் ஒருவர் உடனடியாக சுதாரித்துக் கொண்டு 911 இலக்கத்திற்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் பரபரப்பை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக 32 வயது நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

நியூயார்க் மாகாணம் லாங் ஐலேண்ட்டில் டிக்சன் அவென்யூ பகுதியைச் சேர்ந்தவர் 72 வயதான ட்வைட் பவர்ஸ்.

இவர் உள்ளூர் நேரப்படி வியாழக்கிழமை மதியம் 20க்கும் மேற்பட்டோருடன் ஜூம் வீடியோ அழைப்பில் பொதுவாக விவாதித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென ட்வைட் பவர்ஸை அவரது 32 வயது மகன் கண் இமைக்கும் நேரத்தில் கத்தியால் சரமாரியாக குத்தி கொலை செய்தார்.

ஜூம் வீடியோ அழைப்பில் இருந்த எஞ்சிய நபர்கள் அதிர்ச்சியுடன் இந்த படுகொலையை வேடிக்கை பார்த்துள்ளனர். அந்த வீடியோவில் உடலில் ஆடை இல்லாமல் இருந்த அவரது மகன் சுமார் 15 முறை கத்தியால் தமது தந்தையை தாக்கியுள்ளார்.

இச்சம்பவத்தை நேரலையில் பார்த்த ஜூம் வீடியோ அழைப்பில் இருந்த நபர் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 32 வயது ஸ்கல்லி பவர்ஸ், தமது குற்றத்தை அதிகாரிகளிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.

மட்டுமின்றி வெவ்வேறு சமையல் கத்திகளை பயன்படுத்தி தமது தந்தையை கொலை செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கழுத்தை துண்டிக்கும் அளவுக்கு இந்த தாக்குதல் இருந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிரூபணமானால் 25 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை கிடைக்கலாம் என கூறப்படுகிறது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்