கருப்பின நபர் இறப்பதற்கு முன் அங்கு என்ன நடந்தது? சிசிடிவி கமெராவில் சிக்கிய புதிய வீடியோ காட்சி

Report Print Santhan in அமெரிக்கா

அமெரிக்காவில் கருப்பின நபர் ஒருவர் பொலிசாரால் கொல்லப்பட்ட நிலையில், அவர் இறப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன் என்ன நடந்தது என்பது தொடர்பான புதிய சிசிடிவி வீடியோ காட்சி வெளியாகி அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

அமெரிக்காவில் George Floyd என்ற 46 வயது மதிக்கத்தக்க ஆப்பிரிக்காவை சேர்ந்த அமெரிக்க கருப்பின நபர் கடந்த 25-ஆம் திகதி பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்படும் போது, பொலிஸ் அதிகாரிகளில் ஒருவரான Derek Chauvin என்ற நபர் முழங்காலால், அவரை கீழே வைத்து அழுத்தியதால் பரிதாபமாக இறந்தார்.

இது தொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி, அமெரிக்காவே போராட்ட பூமியாக மாறியுள்ளது. குறித்த பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டு அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது புதிய வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், George Floyd மோசடியில் ஈடுபட்டதன் காரணமாகவே, பொலிசார் அவரை கைது செய்த போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

அதாவது George Floyd உள்ளூர் உணவகம் ஒன்றில் சுமார் 20 டொலர் மதிப்பு கொண்ட பொருளை வாங்கி விட்டு, அதற்கு போலியான ரூபாயை பயன்படுத்தியதாக கூறி, கடந்த 25-ஆம் திகதி பொலிசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது அங்கு விரைந்து வந்த பொலிசார், George Floyd-ஐ கீழே தள்ளி அவரை பரிதாபமாக கொன்றனர். அந்த சம்பவத்திற்கு முன்னர்(George Floyd-ஐ பொலிசார் கீழே தள்ளி கை விலங்கு போடுவதற்கு முன்) என்ன நடந்தது என்பது அங்கிருக்கு கடையின் சிசிடிவி கமெரா ஒன்றில் பதிவாகியுள்ளது.

அதில், பொலிசார் George Floyd-யுடன் சண்டையிடுவதை காட்டுகிறது. அதில் குத்துவதும், தாக்குவதும் போன்றும் உள்ளது. அதன் பின்னரே பொலிசார் அவரை கீழே தள்ளி, கை விலங்கு போட முயற்சித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

இந்த வீடியோ இரண்டு தினங்களுக்கு முன்னரே வெளியாகியுள்ளது. தற்போது இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இன்னும் சில வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அவர் இறப்பதற்கு முன் பொலிசார் அவரை எப்படி நடத்தினர் என்பது தொடர்பான வீடியோக்களும் அதிகமாக பகிரப்பட்டு வருகின்றன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்