ஜார்ஜ் கொல்லப்படும்போது வேடிக்கை பார்த்த பொலிசார் அப்பாவிகளாம்!... நீதிமன்றத்தில் காரசார வாதம்

Report Print Balamanuvelan in அமெரிக்கா

கருப்பினத்தவரான ஜார்ஜ் கொல்லப்படும்போது வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த பொலிசார் தரப்பில் அவர்கள் அப்பாவிகள் என வாதம் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஜார்ஜைக் கொன்ற Derek Chauvinக்கு மட்டுமின்றி, சம்பவத்தின்போது அவருடன் நின்ற மூன்று பொலிசாருக்கும் 40 ஆண்டுகள் தண்டனை விதிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், J Alexander Kueng (26), Thomas Lane (37) மற்றும் Tou Thao (34) என்னும் அந்த மூன்று பேருக்கும் ஜாமீன் கோரி சட்டத்தரணிகள் நீதிமன்றத்தில் விண்ணப்பித்திருந்தார்கள்.

அப்போது விவாதித்த சட்டத்தரணிகள் தங்கள் கட்சிக்காரர்கள் வேலைக்கு சேர்ந்தே நான்கு நாட்கள்தான் ஆகியிருந்தது என்றும், அவர்களை விட 20 ஆண்டுகள் சீனியரான Derekஐ எப்படி தடுக்கமுடியும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Lane மற்றும் Kuengஇன் தரப்பில் ஆஜரான சட்டத்தரணிகள், தங்கள் கட்சிக்காரர்கள் வேலைக்கு சேர்ந்தே நான்கு நாட்கள்தான் அகியிருந்தது என்றும், தங்களை விட மிகவும் சீனியரான Derekஐ எதிர்த்து அவர்களால் பெரிதாக எதுவும் செய்திருக்கமுடியாது என்றும் வாதிட்டனர்.

அவர்களால் என்ன செய்திருக்கமுடியும்?, எழுந்திரு Derek என்றா கூறியிருக்க முடியும் என்று கேட்கிறார் Laneஇன் சட்டத்தரணியான Earl Grey.

Kuengஇன் சட்டத்தரணியோ, தனது கட்சிக்காரர் அப்பா இல்லாமல் வளர்ந்தவர், நாட்டை சிறப்பாக்க வேலைக்கு சேர்ந்தவர் என பரிதாப வேடம் போடுகிறார்.

Laneஇன் சட்டத்தரணி, தனது கட்சிக்காரர் நல்ல பையன், தன்னை விட 20 ஆண்டுகள் சீனியரான Derek முன் வேலைக்கு சேர்ந்து 4 நாட்களே ஆன அவரால் ஒன்றும் செய்திருக்கமுடியாது என்கிறார்.

ஆனால், தனது கட்சிக்காரர்தான் ஜார்ஜை ஆம்புலன்சில் ஏற்றி அவருக்கு CPRசெய்து அவரது உயிரைக் காப்பாற்ற முயன்றவர் என வாதிடுகிறார் Laneஇன் சட்டத்தரணி. ஜாமீன் வழக்கை விசாரித்த நீதிபதி, ஜார்ஜின் குடும்பத்தாரை சந்திக்க முயற்சி செய்யக்கூடாது என பொலிசார் மூவருக்கும் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்