கண்டம் துண்டமாக்கப்பட்ட இளம் தொழிலதிபர் உடலை தைத்து இறுதிச்சடங்கு செய்த குடும்பம்: சகோதரியின் வலி மிக்க சொற்கள்!

Report Print Balamanuvelan in அமெரிக்கா

நியூயார்க்கில் கொலை செய்யப்பட்டு கண்டம் துண்டமாக்கப்பட்ட இளம் தொழிலதிபரின் உடலை மீண்டும் தைத்து, இறுதிச்சடங்கு செய்த வலியை பகிர்ந்துகொண்டுள்ளார் அவரது சகோதரி.

மான்ஹாட்டனில் ஒரு மாதம் முன்பு, தான் 2.2 மில்லியன் டொலர்களுக்கு வாங்கிய புது வீட்டில், இளம் கோடீஸ்வரரான பஹிம் சாலே (33) துண்டு துண்டாக்கப்பட்டு, தலை ஒரு பிளாஸ்டிக் கவரில், கைகால்கள் வெவ்வேறு கவர்களில், உடல் மட்டும் முண்டமாக தரையில், என தனது சகோதரி ஒருவரால் கண்டெடுக்கப்பட்டார்.

சாலேவின் உதவியாளரான Tyrese Devon Haspil (21) என்பவன், சாலேவிடமிருந்து ஏராளமான பணத்தை கையாடல் செய்து சிக்கிய நிலையிலும், சாலே அவனை பொலிசில் பிடித்துக் கொடுக்காமல் மன்னித்து, கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை திருப்பிக்கொடுக்குமாறு கூறியிருந்தும், கொஞ்சமும் ஈவிரக்கமின்றி அவரைக் கொன்றுவிட்டான்.

அவன் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கிறான். இந்நிலையில், தனது தம்பியின் இறுதிச்சடங்கின்போது நடந்த ஒரு விடயத்தை வேதனையுடன் சமூக ஊடகம் ஒன்றில் பகிர்ந்துகொண்டுள்ளார் சாலேவின் அக்காவான Ruby Angela Saleh (41).

பொலிஸ் விசாரணை முடிந்து தம்பிக்கு இறுதிச்சடங்கு செய்ய முடிவெடுத்த நிலையில், அவரது உடல் பாகங்களை தைத்து முழு உடலாக அடக்கம் செய்யக் கோரியிருக்கிறார்கள் சாலே குடும்பத்தினர்.

ஜூலை மாதம் 19ஆம் திகதி இறுதிச்சடங்கு செய்ய முடிவெடுத்திருந்த நிலையில் Rubyக்கு இறுதிச்சடங்கு மையத்திலிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு வந்ததாம். பேசியவர், உடல் பாகங்களை ஒன்றாக தைப்பது இயலாது என்று கூறியிருக்கிறார்.

ஏற்கனவே தம்பியை இழந்த துயரத்திலிருந்த Ruby, சரி, அவனது உடல் பாகங்கள் எந்தெந்த இடத்தில் இருந்ததோ அந்தந்த இடத்தில் வைத்தாவது தம்பியை அடக்கம் செய்யுங்கள் என கதறியிருக்கிறார்.

ஆனால், சரியாக இறுதிச்சடங்கிற்கு முந்தைய தினம், அதே நபர் மீண்டும் Rubyயை அழைத்திருக்கிறார்.

உங்கள் தம்பியின் தலை மற்றும் கைகால்களை சரியாக அதனதன் இடத்தில் வைத்து தைத்துவிட்டோம், கடினமாகத்தான் இருந்தது என்றாலும் சரி செய்துவிட்டோம் என்றாராம் அந்த இறுதிச்சடங்கு மைய ஊழியர்.

தம்பிக்காக கதறிய Rubyயின் கண்ணீர் அவரது மனதை உடையச் செய்துவிட்டதோ என்னவோ... நேற்றுடன் பஹிம் இறந்து ஒரு மாதம் ஆன நிலையில், தம்பியின் நினைவு நாளன்று இந்த துயரச் சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார் Ruby.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்