தாய்ப்பால் மூலம் தாயிடமிருந்து குழந்தைகளுக்கு கொரோனா பரவுமா? வாஷிங்டன் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி!

Report Print Balamanuvelan in அமெரிக்கா
79Shares

தாய்ப்பால் மூலம் குழந்தைகளுக்கு தாயிடமிருந்து கொரோனா பரவுமா என்பதைக் கண்டறிவதற்காக வாஷிங்டன் பல்கலைக்கழகம் ஒன்று ஆராய்ச்சி ஒன்றைத் துவக்கியுள்ளது.

ஒரு பக்கம் மருத்துவர்கள் தாய்ப்பால் சிறந்தது என்று கூறிக்கொண்டிருக்கும் நிலையில், கொரோனா தொற்றிய தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டினால், குழந்தைகளுக்கு நன்மை ஏற்படுமா, தீமை ஏற்படுமா என்பதற்கான பதில் இதுவரை தெரியாமலே உள்ளது.

தாய்ப்பாலில் கொரோனா கிருமி இருக்குமா, அது குழந்தைக்கு பரவுமா என்பதும் இதுவரை தெரியவரவில்லை.

அதேபோல், கொரோனா தொற்றிய ஒரு தாயின் பாலில் கொரோனாவுக்கெதிரான ஆன்டிபாடிகள் இருக்குமா, அப்படி இருந்தால், அவை குழந்தையை கொரோனா தொற்றிலிருந்து காப்பாற்றுமா என்பதும் தெரியவில்லை.

சீனா மற்றும் அமெரிக்க ஆய்வாளர்கள் இது குறித்து தனித்தனியே மேற்கொண்ட ஆய்வுகளில் தாய்ப்பாலில் கொரோனா வைரஸ் இருப்பதற்கான ஆதாரம் இல்லை என்று தெரியவந்தது.

ஆனால், உலக சுகாதார மையம் வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்று, கொரோனா தொற்றிய 46 தாய்மார்களிடம் மேற்கொண்ட ஆய்வில், 43 பேரின் தாய்ப்பாலில் கொரோனா வைரஸ் இல்லை என்றாலும், 3 பேரின் தாய்ப்பாலில் கொரோனா வைரஸ் துகள்கள் இருப்பது தெரியவந்ததாக தெரிவித்துள்ளது.

என்றாலும், தாய்ப்பாலில் வைரஸ் துகள்கள் இருந்தாலும், அதன் பொருள், தாய்ப்பால் நோய்த்தொற்றை உருவாக்காக்கூடியது என்பதோ, அல்லது குழந்தைகளுக்கு பாலிலிருந்து கொரோனா பரவும் என்பதோ அல்ல என்று அந்த ஆய்வை மேற்கொண்டவர்கள் தெரிவித்துள்ளரகள்.

ஆகவே, தாய்ப்பால் குறித்து இப்படி மாறுபட்ட கருத்துக்களே காணப்படும் நிலையில், உண்மை நிலை என்ன என்பதை அறிவதற்காக வாஷிங்டன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் புதிதாக ஒரு ஆய்வை மேற்கொள்ள இருக்கிறார்கள்.

அதற்காக, 18 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள கொரோனா தொற்றிய தாய்மார்களை ஆய்வுக்காக அணுகிவருகிறார்கள் ஆய்வாளர்கள்.

அவர்களில் 50 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு, தாய்ப்பால் கொடுக்கும் 25 தாய்மார்கள், தாய்ப்பால் அளிக்காமல் மாற்று உணவு அளிக்கும் தாய்மார்கள் 25 பேர் என பிரிக்கப்பட்டு இரண்டு மாதங்களுக்கு ஆய்வு முடிவுகள் ஆராயப்பட இருக்கின்றன.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்