அந்த நாட்டு ஜனாதிபதியை கொல்ல நினைத்தேன்: பகீர் தகவலை வெளியிட்ட டிரம்ப்

Report Print Arbin Arbin in அமெரிக்கா

சிரியா ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தை கடந்த 2017-ல் கொலை செய்ய நினைத்தாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பகீர் தகவலை தெரிவித்துள்ளார்

சிரியாவில் தற்போது கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்த விவகாரம் தொடர்பில் தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அளித்த நேர்காணலில்,

2017-ல் சிரியா ஜனாதிபதி பஷார் அல் ஆசாத்தை கொல்ல நினைத்தேன். ஆனால் அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த ஜிம் மேட்டிஸ் அந்த முடிவுக்கு மறுப்பு தெரிவித்தார். அதனால் அவர் முடிவுக்கே விட்டுவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

பொதுமக்கள் மீது ரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாலையே, தாம் ஆசாத் மீது சினம் கொண்டதாகவும் டிரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.

2017 ஏப்ரல் மாதம் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருந்த கான் ஷேக்கவுன் நகரத்தை குறிவைத்து முன்னெடுக்கப்பட்ட தாக்குதலில் சுமார் 80 பேர் கொல்லப்பட்டனர்.

இதனிடையே, டிரம்ப் வெளியிட்ட இந்த தகவலை அடுத்து சிரியா கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளதுடன், அமெரிக்கா அயோக்கியர்களின் கூடாரம் என பதிலடி அளித்துள்ளது.

டொனால்டு டிரம்பின் நிலைப்பாடும் அதையே உறுதி செய்வதாகவும் சிரியாவின் வெளிவிவகார அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.

பொதுவாக பயங்கரவாதிகளே, தலைவர்களை படுகொலை செய்ய திட்டமிடுவார்கள் என குறிப்பிட்ட அமைச்சகம், அதே வேலையை அமெரிக்காவும் செய்வது போல் உள்ளது என காட்டமாக குறிப்பிட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்