அமெரிக்கா மக்கள் தொகையில் 66 சதவீதம் பேர் கொரோனாவல் மரணம்:நாட்டு மக்களை அதிர வைத்த கமலா ஹாரிஸ்

Report Print Basu in அமெரிக்கா
1590Shares

220 மில்லியன் அமெரிக்கர்கள், அதாவது மக்கள் தொகையில் 66 சதவீதம் பேர் கொரோனாவால் மரணமடைந்ததாக துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் கமலா ஹாரிஸ் தவறான தகவல் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அமெரிக்காவில் அடுத்த மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலின் போது நாட்டின் துணை ஜனாதிபதியும் தேர்வு செய்யப்படுகிறார்.

அந்த வகையில் ஜனநாயக கட்சியின் சார்பில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரிஸ் துணை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடுகிறார்.

இந்நிலையில் தேர்தல் பிரச்சாரம் ஒன்றில் பேசிய கமலா ஹாரிஸ், அமெரிக்காவில் மட்டும் 220 மில்லியன் இறப்புகளுக்கு கொரோனா வைரஸ் காரணம் என்று கூறி மக்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாகினார்.

கடந்த சில மாதங்களில் 220 மில்லியன் அமெரிக்கர்கள், அதவாது நாட்டின் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் கொரோனாவால் இறந்துவிட்டதாக கமலா ஹாரிஸ் தவறான தகவலை கூறினார்.

அமெரிக்காவில் குறைந்தது 2,20,000 இறப்புகளுக்கு கொரோனா வைரஸ் தான் காரணம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

கமலா ஹாரிஸ் ஜோ பிடனைப் போலவே குழப்பமடைந்த நிலையில் இருப்தபாக டிரம்ப் ஆதரவாளர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்