தன் காதலன் தன்னுடன் இருக்கும்போதே, இணையத்தில் புதிய காதலனைத் தேடிய ஒரு இளம்பெண்ணை அவளது கண்களில் தெரிந்த காட்சியை வைத்தே சிக்கவைத்தார் அந்த காதலன். அமெரிக்காவில் வாழும் Sam Nunn தனது காதலி தன்னுடன் இருக்கும்போது, படுக்கையில் படுத்தபடி மொபைலில் எதையோ பார்த்துக்கொண்டிருப்பதைக் கவனித்துள்ளார்.
தன் அழகிய காதலியின் முகத்தை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த Samஇன் கண்களில், அவரது காதலியின் கண்கள் பட்டுள்ளன.
அந்த கண்களை அவர் ஜூம் செய்தபோது அவர் கண்ட காட்சி அவரை ஏமாற்றமடையச் செய்தது. ஆம், அந்த பெண், இணையத்தில் காதலர்களைத் தேடும் இணையதளமான Tinderஇல் ஆண்களின் படங்களை ஒவ்வொன்றாக பார்த்துக்கொண்டிருந்தார், அதாவது காதலனுடன் இருக்கும்போதே புது காதலனை தேடிக்கொண்டிருந்தார்.
காதலியின் துரோகத்தை அவரது கண்கள் மூலமாகவே கண்டுபிடித்த Sam, அந்த வீடியோவை சமூக ஊடகத்தில் வெளியிட்டு தான் சோகமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர்து வீடியோவைப் பார்த்தவர்கள், அவர் அந்த பெண் இதயமற்றவள் என்று விமர்சித்துள்ளதோடு, Sam அவளை கைவிட்டுவிட வேண்டும் என்றும், அவர் அவளை கைவிடுவதை ஒரு வீடியோவாக எடுத்து வெளியிடவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்கள்.