அழகான பெண்கள் வீடுகளிலுள்ள செக்யூரிட்டி கமெராக்களை ஹேக் செய்து அந்தரங்க காட்சிகளை ரசித்துவந்த நபர் கைது

Report Print Balamanuvelan in அமெரிக்கா
236Shares

அழகான பெண்கள் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமெராக்களை ஹேக் செய்து, அவர்களது அந்தரங்கங்கத்தை ரசித்துவந்த டெக்னீஷியன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்காவின் டெக்சாசைச் சேர்ந்த Telesforo Aviles (35), ADT என்னும் பாதுகாப்பு கமெரா நிறுவனம் ஒன்றில் டெக்னீஷியனாக பணி செய்பவர்.

தங்கள் நிறுவனத்தின் பாதுகாப்பு கமெராக்கள் பொருத்தப்பட்ட வீடுகளில், எந்தெந்த வீடுகளில் அழகான பெண்கள் இருக்கிறார்கள் என்று பார்த்து, 200 வீடுகளிலுள்ள கமெராக்களை ஹேக் செய்து, நிர்வாண நிலையிலிருக்கும் பெண்களையும், தம்பதியர் பாலுறவு கொள்வதையும் நான்கரையாண்டுகளாக பார்த்து ரசித்துவந்துள்ளார் Aviles.

இதற்காக அவர் 9,600 முறை வாடிக்கையாளர்களின் கமெராக்களை ஹேக் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களில், Amy Johnson மற்றும் அவரது கணவரான Richard ஆகியோர் கூறும்போது, சுமார் 300 முறை அந்த நபர் எங்கள் கமெராக்களை டியூன் செய்தபோது, அவர் என்ன செய்கிறார் என்ற சந்தேகம் ஏற்பட்டது என்கிறார்கள்.

அவர் Amyயை பார்ப்பதற்காக அப்படி செய்கிறாரா, அல்லது எங்கள் பிள்ளைகளை பார்க்கிறாரா என்ற எண்ணம் எனக்கு அப்போதுதான் உருவானது என்கிறார் Richard. பாதிக்கப்பட்டவர்கள் ADT நிறுவனம் மீது வழக்குத் தொடர்ந்துள்ளார்கள்.

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள Aviles கைது செய்யப்பட்டுள்ளார். அவர் ஐந்தாண்டுகள் வரை சிறையில் அடைக்கப்படலாம்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்