இளைஞனை நம்பி தனியாக டேட்டிங் சென்ற 15 வயது சிறுமிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்! 2 ஆண்டுகள் கழித்து அம்பலமான உண்மை

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares

அமெரிக்காவில் 15 வயது சிறுமியிடம் தவறான முறையில் நடந்து கொண்ட இளைஞனை பொலிசார் கைது செய்துள்ளனர்.

அமெரிக்காவை சேர்ந்தவர் Isiah Ramirez (20). இவருடன் 15 வயது சிறுமி ஒருவர் நட்பாகியுள்ளார்.

இதையடுத்து அவருடன் சிறுமி கடந்த 2019ஆம் ஆண்டு டேட்டிங் சென்றுள்ளார்.

தனியாக சென்ற இடத்தில் சிறுமிக்கு முத்தம் கொடுத்த Isiah அவர் உடைகளை களைந்து தவறாக நடந்து கொண்டிருக்கிறார்.

இந்த சம்பவம் தற்போது தான் வெளியில் தெரியவந்த நிலையில் Isiah-ஐ கைது செய்ய சில நாட்களுக்கு முன்னர் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து பொலிசார் Isiah-ஐ கைது செய்தனர்.

அவர் வரும் திங்கட்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ள நிலையில் ஜாமீன் தொகையாக $300,000 நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்