களுத்துறை மாவட்டத்திற்கு சிவப்பு எச்சரிக்கை! பொதுமக்கள் அவதானம்

Report Print Dias Dias in காலநிலை

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலையின் காரணமாக பல மாவட்டங்களிற்கு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தினால் அவதான எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில, களுத்துறை மாவட்டத்திற்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தினால் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் பாலிந்தநுவர பிரதேசத்தில் மண்சரிவு ஏற்படுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுவதனால் குறித்த எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

எனவே குறித்த பிரதேசத்திற்குட்பட்ட பொதுமக்கள் அனைவரும் அவதானமாக செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்