மழையுடனான காலநிலை அதிகரிக்கக் கூடிய சாத்தியம்

Report Print Malar in காலநிலை

நாடு முழுவதும் நிலவும் மழையுடனான காலநிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், கடுமையான மின்னலுக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு சப்ரகமுவ, தெற்கு வடமேற்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறித்த பகுதிகளில் 100 மில்லிமீற்றர் முதல் 150 மில்லமீற்றர் அளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்