பானி புயல் ஒடிசாவில் நாளை கரையை கடக்கிறது

Report Print Kavitha in காலநிலை

வங்கக் கடலில் உருவாகிய அதிதீவிர புயலானபானி புயல் நாளை ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தின் தெற்கு கடலோரப் பகுதியில் கரையைக் கடக்கும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.

புரி மாவட்டத்தின் கோபால்பூர் மற்றும் சந்த்பாலி பகுதிகளுக்கு இடையேயான கடலோரப்பகுதியில், நாளை பிற்பகலில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புயல் காரணமாக புரி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் யாரும் செல்ல வேண்டாம் என்று ஒடிசா அரசு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

புரியில் கரையைக் கடந்தவுடன் ஜகத்சிங்பூர், கட்டாக், குர்தா, ஜாஜ்பூர், பத்ரக், பாலசோர், மயூர்பாஞ்ச் ஆகிய பகுதிகள் வழியாகச் சென்று மேற்கு வங்காளத்துக்குள் பானி புயல் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் காரணமாக குறித்த மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் இன்று முதல் ஒடிசா அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

மேலும் பானி புயல் மணிக்கு 175 முதல் 185 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது என்று வானிலை மையம் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மேலும் காலநிலை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers