பெண்களின் உடல் பற்றிய சில ரகசியங்கள் இதோ!

Report Print Printha in பெண்கள்

பெண்கள் மாதவிடாய், பிரசவம் போன்ற நிலைகளில் பல்வேறு மாற்றங்களை உடல் ரீதியாக சந்திக்கின்றர்கள். இதற்கு ஹார்மோன்கள் முக்கிய காரணமாகும்.

பெண்களின் உடல் ரீதியான செயல்பாடுகள் எப்படி இருக்கும்?
 • சுகப்பிரசவத்தின் போது, பெண்கள் 500 மி.லி ரத்தம் வரை இழக்க நேரிடும். அதுவே சிசேரியன் பிரசவத்தின் போது, 1000 மி.லி ரத்தம் வரை இழக்க நேரிடுகிறது.
 • பெண்களின் இயல்பான நிலையில் இருக்கும் கர்ப்பப்பை 3 இன்ச் நீளமும், 2 இன்ச் அகலமும், 30 கிராம் அளவிற்கு குறைவான எடையுடனும் இருக்கும் சிறிய உறுப்பாகும்.
 • கருவுறாத முட்டை கருப்பை சுவர் செல்களுடன் சேர்ந்து வெளியேறும் நிகழ்வே மாதவிடாய். இந்த சுழற்சி 10 நாட்கள் அல்லது அதற்கு மேலும் கூட தொடர்ச்சியாக நிகழ்கிறது.
 • சீரற்ற மாதவிடாய் பிரச்சனையால், திடீரென உடல் எடை உயர்வு போன்ற உணர்வு, தூக்கமின்மை போன்ற பல உடல், மனநலப் பிரச்சனைகள் ஏற்படுகிறது.
 • பெண்கள் குழந்தை பெற்ற பின் அவர்கள் உடலின் ஹார்மோன் அளவுகள் திடீரென குறையும். இதனால் போஸ்ட்பார்டம் ப்ளூஸ் (Postpartum blues) என்ற மனநலப் பிரச்சனைகள் 15 சதவீத பெண்களை பாதிக்கிறது.
 • மெனோபாஸூக்கு பின் எஸ்ட்ரோஜென் ஹார்மோன் இழப்பு காரணமாக 20% பெண்கள் எலும்பு அடர்த்தியை இழக்க நேரிடுகிறது.
 • ஒரு பெண் குழந்தை, தன் தாயின் கர்ப்பத்தில் சிசுவாக வளரும் போதே அதன் வாழ்நாளுக்கான கருமுட்டைகள் உருவாகியிருக்கும்.
 • மாதவிடாய்க்கு பின் எஸ்ட்ரோஜன் ஹார்மோன் இழப்பால், மாரடைப்பு ஆபத்து பெண்களுக்கு அதிகமாகின்றது.
 • கருமுட்டை என்பது சரும செல்லை விட 4 மடங்கு பெரியது ரத்த சிவப்பணுவை விட 26 மடங்கு பெரியது. விந்தணுவை விட 16 மடங்கு பெரியது.
 • கருவில் 7 மில்லியன் கருமுட்டைகளுடன் வளரும் பெண் குழந்தை பிறக்கும் போதே 2 மில்லியன் கருமுட்டைகளுடன் பிறக்கும். பூப்படையும் போது, 4 லட்சம் கருமுட்டைகள் மீதமிருக்கும். அதன் வாழ்நாளில் 500 கருமுட்டைகள் வரை வெளிப்படும்.
 • ஒவ்வொரு பெண்ணும் தனது வாழ்நாளில் தோராயமாக 3.500 நாட்களை மாதவிடாயுடன் கழிப்பதுடன், 81% பெண்கள் மாதவிடாய் நாட்களில் அடிவயிறு வலியால் துன்புறுகிறார்கள்.
 • மாதவிடாய் நாட்களுக்கு முன் நடைபெறும் ஹார்மோன் ஏற்ற, இறக்க மாறுபாடுகளால் 30% பெண்கள் மூட் ஸ்விங்ஸ் பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
 • பெண்களின் கர்ப்பப்பை, கர்ப்பகாலத்தின் ஒன்பதாவது மாதத்தில் ஏறக்குறைய 40 செ.மீ அளவுக்கு நீளமாக இருப்பதுடன், குழந்தையின் நஞ்சுக்கொடி 5 கிலோ எடையைச் சுமந்திருக்கும்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments