பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் நல்லதா? ஆபத்தா?

Report Print Printha in பெண்கள்
1232Shares
1232Shares
ibctamil.com

வெள்ளைப்படுவது என்பது இயல்பான ஒரு நிகழ்வு, இது பெண்ணுறுப்பில் உள்ள திசுக்கள், பாக்டீரியா மற்றும் பூஞ்சைத் தொற்றுகள் ஏற்படாமல் பாதுகாப்பாக்க உதவுகிறது.

சில நேரத்தில் சினைப்பையில் இருந்து முட்டை வெளியேறும் போது சிறிய அளவில் ரத்தக்கசிவு ஏற்படும். அதனால் பழுப்பு அல்லது சிவப்பு நிறத்தில் வெள்ளைப்படுவது உண்டாகும்.

ஆனால் வெள்ளைப்படும் போது அதிகப்படியான நிற வேறுபாடு, துர்நாற்றம், அதிகப்படியான வயிற்றுவலி, பிறப்புறுப்பில் எரிச்சல் மற்றும் வலி ஆகியவற்றை சந்திக்க நேரிட்டால் அது பாக்டீரியா அல்லது பூஞ்சைத் தொற்றுக்களின் காரணமாக இருக்கலாம்.

மாதவிடாய் முடிந்த காலத்தில் உள்ள பெண்களுக்கு சிவப்பு கலந்து வெள்ளைப்படுவது போன்று இருந்தால், அது கர்ப்பப்பை வாய் புற்றுநோய் அல்லது கர்ப்பப்பை புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.

எனவே இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால், உடனே மருத்துவரை சந்திக்க வேண்டும்.

வெள்ளைப்படுதலுக்கான தீர்வுகள்
  • அமரந்த் கீரையை நீரில் போட்டு சிறிது நேரம் நன்கு கொதிக்க வைத்து, பின் அதனை வடிகட்டி, வெதுவெதுப்பான நிலையில் பருக வேண்டும்.
  • உலர்ந்த நெல்லிக்காயின் விதைகளை பொடி செய்து, மோருடன் கலந்து தினமும் இருவேளை பருகி வர நல்ல பலன் கிடைக்கும்.
  • 2 டீஸ்பூன் வெந்தயத்தை நீரில் போட்டு கொதிக்க வைத்து, வடிகட்டி அந்நீர் குளிர்ந்ததும், அதனைக் கொண்டு யோனிப் பகுதியை சுத்தம் செய்ய வேண்டும்.
  • வாழைப்பழத்தை நெய் சேர்த்து 1 நிமிடம் வதக்கி தினமும் உட்கொண்டு வந்தாலும், வெள்ளைப்படுதல் பிரச்சனை நீங்கும்.
  • ஒரு வெண்டைக்காயை துண்டுகளாக நறுக்கி அதனை நீரில் போட்டு கொதிக்க வைத்து குளிர்ந்ததும் அந்நீரை வடிகட்டி அதை குடித்து வந்தால், வெள்ளைப்படுதல் அதிகமாக இருக்கும் பெண்களுக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.
  • மாம்பழத்தின் தோலை அரைத்து அதனை யோனியில் தடவி வந்தால், வெள்ளைப்படுதல் பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

மேலும் பெண்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்