பொருளாதார வளர்ச்சியில் சீனா வளர்ந்துவந்தாலும் அந்நாட்டில் பெண்களுக்கு எதிரான பாகுபாடுகள் அவர்களது அழகு மற்றும் உடல் அமைப்பு ஆகியவற்றினை அடிப்படையாக வைத்து இன்று வரை சில அவலங்கள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
சீனாவில் 27 வயது கடந்தும் ஒரு பெண்ணுக்கு திருமணமாகவில்லை என்றால் அவர்களை ஷெங் நூ என அழைப்பார்கள்.
அதாவது எஞ்சிய பெண்கள் என்று அர்த்தம். ஒரு கடையில் வாடிக்கையாளர்களால் நிராகரிக்கப்பட்டு தரக்குறைவான பொருளுடன் ஒப்பிடுவதை போல பொருள்படுகிறது இந்த வார்த்தை.
மேலும், சீனாவில் திருமணம் நடந்தால் அங்கு மணப்பெண் தோழியாக இருப்பதற்கு அழகிய பெண்கள் விலைக்கு வாங்கப்படுவார்கள்.
மணப்பெண் தோழிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இவர்களுக்கும் கொடுக்கப்படுகிறது. பார்ப்பதற்கு மணப்பெண் தோழிகள் அனைவரையும் கவரும் விதமாக படுகவர்ச்சியாக இருக்க வேண்டும். அதிகமாக கல்லூரியில் படிக்கும் பெண்களையே தெரிவு செய்கிறார்கள்.
அந்த மாணவிகளுக்கு பணத்தேவைகள் இருப்பதால் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்கின்றனர்.
சில சீன திருமண விழாக்களில் வரும் விருந்தினர்களுக்கு இரையாக மணப்பெண் தோழிகள் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு அனுப்பிவைக்க படுகிறார்கள்.
இதற்காக மணப்பெண் தோழியாக திருமண விழாவுக்கு விலை மாதுக்களை அழைத்து வரும் கொடுமைகளும் சீனாவில் அரங்கேறி வருகிறது.
ஏனெனில், சில திருமண விழாக்களில் விளையாட்டு என்ற பெயரில் மணப்பெண் தோழிகளை உடல் ரீதியான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகிறார்கள்.
மேலும், சீனாவில் சில வேலைவாய்ப்பு நிறுவனங்கள் அழகிய பெண்கள் வேண்டும் என் விளம்பரம் செய்வதாக மனித உரிமை ஆணையம் தெரிவித்துள்ளது.
சில வேலைவாய்ப்பு அறிவிப்புகளில் பெண்கள் உடல் அமைப்பு இப்படி இருக்க வேண்டும், உயரம், எடை, குரல் அல்லது முகம் போன்றவையும் அந்த வேலைக்குத் தேவையில்லாததை எல்லாம் கேட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அதிலும் சில விளம்பரங்கள் ஆண் வாடிக்கையாளர்களை ஈர்க்க ஏற்ற உடல் அமைப்புடன் கூடிய பெண்கள் தேவை என்றெல்லாம் கூட வேலை வாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளனர்.
சீனாவில் பாலின ரீதியாக இப்படி விளம்பரம் செய்வது குற்றம் என்றாலும் அதற்கான முழு விளக்கம் இல்லை என்பதால் தான் இப்படி விளம்பரங்கள் செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது.