தண்டவாளத்தில் தவறி விழுந்த குழந்தை: தாய் என்ன செய்தார் தெரியுமா?

Report Print Peterson Peterson in ஆசியா
0Shares
0Shares
lankasrimarket.com

சீனா நாட்டில் உள்ள தண்டவாளம் ஒன்றில் குழந்தை தவறி விழுந்ததை தொடர்ந்து ரயில் புறப்படுவதற்கு முன்னதாக தாயார் காப்பாற்றியுள்ள காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவில் உள்ள Qinghai மாகாணத்தில் Xining நகர ரயில் நிலையத்தில் தான் இந்த பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.

சில தினங்களுக்கு முன்னர் தாயார் ஒருவர் தனது 3-வது குழந்தையை அழைத்துக்கொண்டு ரயில் நடைமேடையில் நடந்துச் சென்றுள்ளார்.

அப்போது விரைவு ரயில் ஒன்று வந்து நின்றவுடன் புறப்படுவதற்கு தயாராக இருந்துள்ளது.

இந்நிலையில், நடைமேடையில் தாயாருடன் நடந்து வந்த அந்த குழந்தை திடீரென ரயிலை நோக்கி ஓடுகிறாள்.

பின்னர், ரயிலின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைய அதனை தாவி பிடிக்க முயன்றபோது கை தவறி ரயில் தண்டவாளத்தில் விழுந்துள்ளாள்.

மகள் ரயிலுக்கு அடியில் விழுந்துவிட்டதை கண்ட தாயார் அலறிக்கொண்டு மகளை தூக்க முயன்றுள்ளார். ஆனால், சில நிமிடங்களாக போராட்டம் முடியவில்லை.

இக்காட்சியை கண்ட சக பயணிகளும் குழந்தையை தூக்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

சம்பவம் அறிந்த ரயில் நிலைய பொலிசார் உடனடியாக விரைந்துச் சென்று ரயில் புறப்படுவதை தடுத்து நிறுத்த முயன்றுள்ளார்.

ஆனால், ரயில் புறப்படுவதற்கு சில வினாடிகளுக்கு முன்னர் குழந்தையை பயணிகள் பத்திரமாக மீட்டு தாயாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

ரயில் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கமெராவில் பதவான இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

மேலும் ஆசியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments