புதிய முடி வளர இதன் தோலை பயன்படுத்துங்கள்

Report Print Printha in அழகு
0Shares
0Shares
Seylon Bank Promotion
advertisement

முடி உதிர்வு பிரச்சனை ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் அல்லது பரம்பரையாக தொடரும் பிரச்சனையாகவும் இருக்கலாம்.

ஆரோக்கியம் மற்றும் அழகிற்கு தேவையான சத்துக்களை பெற தினசரி காய்கறிகளை சாப்பிட்டாலே போதுமானது.

advertisement

ஆனால் இச்சத்துக்களை நேரடியாக முடிக்கு கொடுக்கும் போது மிகச்சிறந்த பலனை பெறலாம்.

தேவையான பொருட்கள்
  • உருளைக்கிழங்கு - 4
  • தண்ணீர் - 1/2 கப்
தயாரிக்கும் முறை

உருளைக்கிழங்கை துண்டுகளாக நறுக்கி, அதனுடன் 1/2 கப் தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து அதை சுத்தமான துணியில் போட்டு, அதன் சாறை மட்டும் வடிகட்டிக் கொள்ள வேண்டும்.

பின் அதை 20-25 நிமிடங்கள் கழித்து தலைமுடியை மிதமான சூடுள்ள நீர் அல்லது குளிர்ந்த நீரில் அலச வேண்டும்.

மற்றொரு முறை

உருளைக்கிழங்கு தோலை மண் இல்லாமல் நன்றாக சுத்தம் செய்து அதை 1 லிட்டர் தண்ணீரில் போட்டு சில நிமிடங்கள் கொதிக்க வைத்து பின் அதனை குளிர செய்ய வேண்டும்.

உருளைக்கிழங்கு தோல் நீரை, முடியில் நன்றாக அலசி வர வேண்டும்.

பயன்கள்

மேல் கூறப்பட்ட இரண்டு டிப்ஸ்களை வாரத்தில் இரண்டு முதல் மூன்று முறைகள் செய்து வந்தால் முடி உதிர்வு நின்று புதிய முடிகளின் வளர்ச்சி அதிகரிக்கும்.

மேலும் அழகு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்