புதிய ஜனநாயக கட்சியின் தலைவராக சீக்கியர் தெரிவு

Report Print Fathima Fathima in கனடா
0Shares
0Shares
lankasri.com

கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின்(என்.டிபி) தலைவராக சீக்கியரான ஜக்மீட் சிங் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இடதுசாரி கட்சியான புதிய ஜனநாயக கட்சியின் தலைவருக்கான போட்டியில் மூவரை தோற்கடித்து ஜக்மீட் சிங் வெற்றி பெற்றுள்ளார், இவர் பெற்ற வாக்குகள் 53.6 சதவிகிதமாகும்.

இதன்மூலம் பெரிய கட்சியை வழிநடத்தும் முதல் சிறுபான்மை இனத்தவர் என்ற பெருமையை பெறுகிறார்.

இதுகுறித்து அவர் பேசுகையில், வலுவிழந்திருக்கும் கட்சியை ஸ்திரப்படுத்துவதே தன்னுடைய முதல் கடமை என்றும், இந்த வெற்றி தனக்கான நம்பமுடியாத பெரிய மரியாதை எனவும் கூறியுள்ளார்.

கனடாவில் 2019ம் ஆண்டு நடக்கவுள்ள பொதுத்தேர்தலில் இவர் தலைமையில் புதிய ஜனநாயக கட்சி தேர்தலை சந்திக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்