கனடாவில் புதிதாக 79,500 பேருக்கு வேலை வாய்ப்பு

Report Print Dias Dias in கனடா
0Shares
0Shares
lankasri.com

கடந்த மாதத்தில் புதிதாக 79,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளதாக கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் தொடர்ச்சியாக கடந்த 12 மாதங்களாக கனடாவில் புதிய வேலை வாய்ப்புகள் ஆக்கபூர்வமான வளர்ச்சியை பதிவு செய்து வந்துள்ளதுடன், கடந்த 2007ஆம் ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னர், மீண்டும் தற்போதே இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அந்த வகையில் கடந்த 12 மாதங்களில் வேலை வாய்ப்புகள் 2.1 சதவீத அதிகரிப்பை பதிவு செய்துள்ளதாகவும், நவம்பர் மாதம் வரையில் குறைந்தது 3,90,000 பேருக்கு புதிதாக முழுநேர வேலை கிடைத்துள்ளதாகவும், 18 ஆண்டுகளின் பின்னர் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் வேலையற்றோர் வீதம் 5.9 ஆக குறைவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், கனேடிய வரலாற்றில் கடந்த சுமார் பத்து ஆண்டு காலத்தில், இதுவே ஆகக்குறைந்த வேலையற்றோர் வீதம் எனவும் கனேடிய புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒக்டோபர் மாதத்தில் 6.3ஆக காணப்பட்ட வேலையற்றோர் வீதம், கடந்த மாதத்தில் 5.9ஆக குறைவடைந்துள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரமும் மூன்றாவது காலாண்டில் 1.7 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் மத்திய புள்ளிவிபரத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்