கனடாவின் RCMP தலைமை பதவி பெறும் முதல் பெண்!

Report Print Mohana in கனடா
0Shares
0Shares
Cineulagam.com

31-வயதுடைய Brenda Lucki ஆர்சிஎம்பி அதிகாரி கனடாவின் முதல் நிரந்தர பெண் ஆர்சிஎம்பி கமிசனராக பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை காலை றிஜைனா, சஸ்கற்சுவான் ஆர்சிஎம்பி அக்கடமியில் பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் றல்ப் குட்டேல் இருவரும் இத்தகவலை அறிவித்தனர்.

2016-லிருந்து சஸ்கற்சுவானில் ஆர்சிஎம்பி கட்டளை அதிகாரியாக பணிபுரிந்துள்ளார்.

1986-ல் ஆர்சிஎம்பியில் சேர்ந்தவர்.

முன்னாள் யுகோஸ்லாவியாவிலும் கடமையாற்றியுள்ளார்.

இரகசிய நடவடிக்கைகள் மற்றும் போதை பொருள் அலகிலும் அனுபவம் கொண்டவர்.

ஐக்கிய நாடுகள் பொதுமக்கள் பொலிஸ் மிசன் கெயிட்டியில் பணிபுரிய பயிற்சி பெற்றவர்.

2013ல் கவர்னர் ஜெனரலின் பொலிஸ் படைகளின் தகுதி ஆணை விருதையும் பெற்றுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்