ட்ரம்பின் நண்பனாக நடித்தது போதும் ஜஸ்டின்: கூறும் மெக்சிகோ அரசியல்வாதி

Report Print Balamanuvelan in கனடா
143Shares
143Shares
lankasrimarket.com

மெக்சிகோ முன்னாள் அரசியல்வாதியான Agustin Barrios Gomez, கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை, அமெரிக்க அதிபர் டிரம்புடன் நண்பன் போல் நடித்தது போதும், நண்பர்களாக இல்லாமல் கூட்டாளிகளாக இருக்க முடியாது, அதேபோல் இது நண்பர்களை நடத்தும் விதமும் அல்ல என்று விமர்சித்துள்ளார்.

முன்னாள் அரசியல்வாதியான Agustin, ஆரம்பத்தில் ஜஸ்டின் அமெரிக்காவுடன் நட்பாக இருக்க முயற்சித்தது நல்ல நடவடிக்கைதான், ஆனால் அந்த கால கட்டம் முடிந்துவிட்டது என்று கூறியுள்ளார்.

நாம் உட்கார்ந்து, நம் நாட்டின் முக்கிய விடயங்கள், தேவைகள் என்ன என்பதை கவனிக்க வேண்டும், அதோடு நாம் நண்பர்களாக இல்லாவிட்டால் கூட்டாளிகளாகவும் இருக்க முடியாது என்பதை தெளிவு படுத்திக் கொள்ள வேண்டும், மேலும் இது நண்பர்களை நடத்தும் விதமும் இல்லை என்று அவர் கூறினார்.

டிரம்ப் கூறியுள்ளதுபோல் தனித்தனியே வர்த்தக ஒப்பந்தங்களில் கையெழுத்திட ஆசை காட்டப்பட்டாலும் கூட அவ்வாறு செய்யாமல், கனடாவும் மெக்சிகோவும் இணைந்தே இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இரு நாடுகளும் தனித்தனியே ஒப்பந்தங்கள் செய்துகொள்ள முயன்றால், அது அவை இரண்டும் செய்யும் மிகப்பெரிய தவறாகிவிடும்.

இரு நாடுகளுடன் பேச்சு வார்த்தைகளை நடத்துவதைவிட ஒரு நாட்டின் மீது அழுத்தம் கொடுப்பது அமெரிக்காவிற்கு எளிதாகிவிடும், அதுதான் அமெரிக்காவின் சூழ்ச்சியும்கூட என்றும் Agustin கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்