International
Notification
Notification
Submit Cancel

பிரபல துணை நடிகை மர்ம மரணம்!

Topics :
advertisement

பெங்களூரில் கன்னட துணை நடிகை ஒருவர் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல கன்னட நடிகர் வி.ரவிச்சந்திரனின் மகன் மனோரஞ்சன் நடிப்பில் உருவாகும் படம் விஐபி, இந்த படத்தின் படப்பிடிப்பு பெங்களூர் அருகே அவலஹள்ளியில் படமாக்கப்பட்டது.

அன்றைய தினம் மட்டும் 160 பேர் படப்பிடிப்பில் கலந்து கொண்டனர், பணிகள் முடிந்து மாலை வீடு திரும்பும் போது பத்மாவதி என்ற துணை நடிகை மாயமானது தெரியவந்தது.

இவரை தேடிச்சென்ற போது படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு அருகே சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்.

இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள பொலிசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர், பத்மாவதி கடந்த 20 ஆண்டுகளாக துணை நடிகையாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

மேலும் சினிமா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

advertisement
advertisement
advertisement