கிரிக்கெட் வரலாற்றில் முதன்முறையாக ஏற்பட போகும் சிறப்பான மாற்றம்

Report Print Raju Raju in கிரிக்கெட்
429Shares
429Shares
lankasrimarket.com

ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டி தொடர்களை மறுசீரமைக்கும் விடயம் தொடர்பான ஐசிசி ஆலோசனை நடத்தியுள்ளது.

ஐசிசி-யின் உறுப்பினர்கள் நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் அடுத்த சில வருடங்களுக்கு கிரிக்கெட் முறையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடத்தினார்கள்.

அதில், ஒன்பது நாடுகள் பங்கேற்கும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரை வரும் 2019 முதல் அடுத்த இரண்டாண்டுகளுக்கும் மற்றும் பதிமூன்று நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் தொடரை 2019 முதல் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நடத்துவது குறித்து பேசப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொள்ளும் டெஸ்ட் அணிகள் சொந்த மண்ணில் மூன்று தொடர்களையும், வெளிநாட்டு மண்ணில் மூன்று தொடர்களை விளையாட வேண்டும்.

ஒருநாள் அணிகள் தலா இரண்டு தொடர்களை சொந்த மண்ணிலும், வெளிநாட்டு மண்ணிலும் விளையாட வேண்டும் என தெரிகிறது.

அதே போல டெஸ்ட் போட்டிகளில் மொத்தம் 100 புள்ளிகள் தரப்படும். அதில் தொடரை வெல்லும் அணிக்கு 60 புள்ளிகள் தரப்படும். போட்டிகள் டிராவில் முடிந்தால் புள்ளிகள் பகிர்ந்தளிக்கப்படும்.

மீதமுள்ள 40 புள்ளிகள் தனிப்பட்ட போட்டிகளின் வெற்றியை வைத்து அணிகளுக்கு ஒதுக்கப்படும் என தெரியவந்துள்ளது.

இது சம்மந்தமான அறிவிப்பை ஐசிசி இந்த வாரத்தில் வெளியிடலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்