இதை மட்டும் செய்தால் மீண்டும் இலங்கை அணியில் மலிங்காவுக்கு வாய்ப்பு

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது திறமையை லசித் மலிங்கா நிரூபித்தால் அவரை சர்வதேச இலங்கை அணியில் மீண்டும் சேர்ப்பது குறித்து பரிசீலிப்போம் என தெரிவு குழு தலைவர் கிரகெம் லெப்ரோய் கூறியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா தொடர்ந்து சர்வதேச அணியிலிருந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறார்.

எப்போதும் ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக விளையாடும் அவரை இந்தாண்டு மும்பை அணி ஏலத்தில் எடுக்கவில்லை.

மலிங்காவின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டதா என கேள்வியெழும்பியுள்ள நிலையில், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து தான் ஓய்வு பெற சாத்தியம் உள்ளது என சமீபத்தில் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் இது குறித்து பேசியுள்ள இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் தெரிவு குழு தலைவர் கிரகெம் லெப்ரோ, நாங்கள் முழுமையாக மலிங்காவை நிராகரிக்கவில்லை, எங்கள் அணிக்கான திட்டத்தில் அவர் பெயர் இன்னும் உள்ளது.

உள்நாட்டு கிரிக்கெட்டில் தனது திறமையையும், உடல்தகுதியையும் மலிங்கா நிரூபித்தால் அவரை நிச்சயம் பரிசீலிப்போம் என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்