இந்த உணவுகள் மலச்சிக்கலை உண்டாக்கும்: உங்களுக்கு தெரியுமா?

Report Print Printha in உணவு
0Shares
0Shares
lankasrimarket.com

சிலர் ஒரு நாளில் ஒருமுறை, இரண்டு முறை அல்லது மூன்று முறை கூட மலம் கழிக்கலாம். இதனால் பிரச்சனைகள் ஒன்றும் இல்லை.

ஆனால் உண்மையான மலச்சிக்கல் பிரச்சனை என்பது வழக்கத்திற்கு மாறாக மலம் வெளியேறாமல் இருப்பது, மலம் இறுகிப்போவது, மலம் கழிப்பதில் சிக்கல், மலம் முழுவதுமாக போகவில்லை என்ற உணர்வு, போன்ற நிலைமையை சந்திப்பவர்களுக்கு மலச்சிக்கல் உள்ளது என்று அர்த்தம்.

எந்த உணவுகள் மலச்சிக்கலை உண்டாக்கும்?
  • மலச்சிக்கல் ஏற்பட நாம் எடுத்துக் கொள்ளும் உணவு முறையே காரணமாகும். அதாவது கொழுப்பு மிகுந்த உணவு, பால் சார்ந்த உணவு, துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு போன்ற உணவு வகைகளை அதிகமாகவும், நார்ச்சத்துள்ள உணவுகளை குறைவாகவும் சாப்பிடுவதால் ஏற்படுகிறது.
  • அதோடு தண்ணீர் குறைவாக குடிப்பது, காய்கறி, கீரைகள், பழங்களை சாப்பிடாமல் இருப்பது போன்ற உணவுப் பழக்கங்கள் பலருக்கும் மலச்சிக்கலை உண்டாக்கும்.
மலச்சிக்கலை தடுக்க என்ன செய்யலாம்?
  • நாம் சாப்பிடும் உணவு வகைகளில் நார்ச்சத்து நிறைந்த கோதுமை, கேழ்வரகு. தினை, வரகு, கொள்ளு போன்ற முழுத் தானிய உணவு வகைகள் இருக்க வேண்டும்.
  • வாழைத்தண்டு, கேரட், முள்ளங்கி, முட்டைக்கோஸ், பாகற்காய், புடலங்காய், அவரைக்காய், கொத்தவரங்காய் போன்ற காய்கறிகளை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
  • பொட்டுக்கடலை, கொண்டைக்கடலை, மொச்சை போன்ற பருப்பு வகைகள், கீரைகள், ஆரஞ்சு, கொய்யா, மாதுளை, ஆப்பிள், அத்திப்பழம், பேரீச்சை, மாம்பழம் போன்ற பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்.
  • மிளகு, ஓமம், கொத்துமல்லி, மிளகாய் போன்றவற்றிலும் நார்ச்சத்து அதிகம். இவற்றில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை அதிகமாக சாப்பிடலாம்.

மேலும் உணவு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்