உலகக்கோப்பை போட்டியின் வெற்றி களிப்பில் குரோசியா பிரதமர் செய்த செயல்: வெறுப்படைந்த ரஷ்ய பிரதமர்?

Report Print Santhan in கால்பந்து
710Shares
710Shares
lankasrimarket.com

உலகக்கோப்பை காலிறுதிப் போட்டியில் ரஷ்யா அணியுடன் குரோசியா வெற்றி பெற்றதால், அதை குரோசியா பிரதமர் ஆட்டம் போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிலையில், அருகிலிருந்த ரஷ்ய பிரதமர் வெறுப்படைந்தார்.

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதிப் போட்டிகள் எல்லாம் முடிந்துவிட்டன.

இறுதிப் போட்டியில் பிரான்ஸ் மற்றும் குரோசியா அணிகள் மோதவுள்ளன. இப்போட்டி வரும் ஞாயிற்று கிழமை நடைபெறவுள்ளது.

இந்நிலையில் குரோசிய பெண் பிரதமர் தொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த தொடரின் காலிறுதி ஆட்டத்தில் குரோசியாவும், ரஷ்யாவும் மோதின.

அப்போது ஆட்ட நேரத்தில் இரு அணிகளும் தலா 2 கோல்களை அடித்தன.

ஒவ்வொரு கோலின்போதும், ரஷ்ய பிரதமர் மற்றும் குரேஷியா அதிபர் பரஸ்பரம் கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்து கொண்டனர்.

ஆட்டம் சமநிலையில் முடிந்ததால், பெனால்டி ஷூட்டில் 4-3 என்ற கோல் கணக்கில் குரேஷியா வென்றது. இதைக் கண்ட குரோசியா பிரதமர் கை தட்டி குதூகலத்தில் குதித்தார்.

அதே சமயம் ரஷ்யா அணி தோல்வியடைந்ததால், ரஷ்ய பிரதமர் முகம் சுருங்கி காணப்பட்டது. ஆனால் அதை அவர் வெளியில் காட்டிக் கொள்ளாமல் வேறு பக்கம் திரும்பிக் கொண்டார்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்