ஆரம்பம் முதல் ஆதிக்கம் செலுத்தி முல்லையை பந்தாடியது லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணி!

Report Print Samaran Samaran in கால்பந்து
0Shares
0Shares
lankasrimarket.com

வடக்கு கிழக்கு பிரீமியர் லீக் போட்டிகள் யாழ்ப்பாணம் துரையப்பா மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

நேற்று நடைபெற்ற 7ஆவது ஆட்டத்தில் முல்லை பினீக்ஸ் அணியை எதிர்த்து லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணி மோதியது.

இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி விளையாடிய லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் (திருகோணமலை) அணி 3:2 என்கின்ற கோல் கணக்கில் முல்லை பினீக்ஸ் (முல்லைத்வு) அணியை வீழ்த்தி வெற்றிபெற்றது.

முதல் பாதி ஆட்டத்தில் முன்று கோல்களை அடித்து ரிங்கோ ரைரன்ஸ் முன்னிலையில் இருந்தது.

ரிங்கோ ரைரன்ஸ் சார்பில் 42வது நிமிடத்தில் எஸ் முகமட் ருசான் ஒரு கோலை பெற்றுக்கொடுக்க

45வது, 46 ஆவது நிமிடங்களில் அடுத்தடுத்து ஏ.முகமட் வாரித் இரண்டு கோல்களை பெற்றுக்கொடுத்தார்.

இரண்டாவது பாதி ஆட்டத்தில் முல்லை பீனிக்ஸ் இரண்டு கோல்களை பெற்றுக்கொண்டது.

முல்லை பீனிக்ஸ் சார்பில் 81வது நிமிடத்தில் எஸ்.மோகராஜ் முதலாவது கோலை பெற்றுக் கொடுக்க 90வது நிமிடத்தில் அலி அக்பர் சன்சயன் தனது அணிக்காக 2 இரண்டாவது கோலை பெற்றுக்கொடுத்தார்.

இரண்டாவது பாதியாட்டத்தின் இறுதியில் முல்லை பினீக்ஸ் அணி அதிரடியாக விளையாடினாலும் லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணி வீரர்களின் தடுப்பாட்டத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.

இறுதியில் லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணி 03 : 02 என்ற கோல் கணக்கில் தனது முதலாவது வெற்றியை பெற்று தனது வெற்றி பயணத்தை ஆரம்பித்தது.

இந்த போட்டியின் ஆட்ட நாயகனாக லங்காஸ்ரீயின் ரிங்கோ ரைரன் அணியின் முகமட் வாரித் தெரிவானார்.

இன்றைய போட்டியில் தமிழ்வின் இன் அம்பாறை அவெஞ்சர்ஸ் அணியும் மாதோட்டம் FC அணியும் மோதவுள்ளது.

இன்றைய போட்டி இரவு 7 மணிக்கு ஆரம்பமாகும்.

மேலும் கால்பந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்