அகதிகள் மையத்தில் பயங்கரம்: மருத்துவரை கத்தியால் குத்திக் கொன்ற அகதி

Report Print Raju Raju in ஜேர்மனி
0Shares
0Shares
Cineulagam.com

ஜேர்மனியில் உள்ள அகதிகள் ஆலோசனை மையத்தில் மனோதத்துவ மருத்துவரை குத்திக் கொலை செய்த சிரியா அகதியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஜேர்மனியின் Saarbruecken நகரில் அகதிகள் ஆலோசனை மையம் ஒன்று அமைந்துள்ளது.

இங்கு உள்ள அகதிகளை உடல் ரீதியாவும், மன ரீதியாவும் சோதிக்க 30 வயதான மனோதத்துவ மருத்துவர் ஒருவரை அரசு பணியில் அமர்த்தியுள்ளது.

இந்நிலையில் நேற்று மருத்துவர் அகதிகள் ஆலோசனை மையத்தில் 27 வயதான சிரியாவிலிருந்து வந்துள்ள அகதியுடன் பேசி கொண்டிருந்தார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்த கோபத்தில் சிரிய அகதி மருத்துவரை கத்தியால் குத்திக் கொலை செய்துள்ளான்.

பின்னர் இது குறித்து பொலிசுக்கு தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்துக்கு வந்த பொலிசார் அகதியை கைது செய்தார்கள்.

அகதி மற்றும் உயிரிழந்த மருத்துவரின் பெயர் உட்பட மற்ற விவரங்கள் தெரியவில்லை.

இதனிடையில் ஜேர்மனியில் உள்ள அகதிகள் மற்றும் புலம்பெயர்வோருக்கான முகாம்கள் மோசமான நிலையில் உள்ளதாக அங்கு தங்கியிருப்பவர்கள் புகார் கூறி வருகிறார்கள்.

கடந்த ஞாயிற்றுகிழமை ஜேர்மனியின் அகதிகள் முகாம் ஒன்றில் தாயார் முன்னிலையில் அவரது 5 வயது மகன் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments