ஜேர்மன் குடியுரிமை கோரும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

Report Print Arbin Arbin in ஜேர்மனி
0Shares
0Shares
lankasrimarket.com

ஜேர்மனியில் குடியுரிமை கோரும் பிரித்தானியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் மட்டும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டை விடவும் ஜேர்மனியில் குடியுரிமை வழங்கப்பட்ட பிரித்தானியர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டில் 361% அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த திடீர் அதிகரிப்புக்கு முக்கிய காரணியாக கருதப்படுவது, ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகியதே என கூறப்படுகிறது.

மேலும் தற்போது குடியுரிமை கோரிக்கை வைத்துள்ள பிரித்தானியர்களின் மனு மீது நடவடிக்கை மெற்கொள்ள மேலும் சில மாதங்களின் தாமதம் நேரலாம் என அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர். மட்டுமின்றி 2017 ஆம் ஆண்டு முடிவில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஜேர்மனியில் குடியிருந்து வந்த பிரித்தானியர்களில் 3.9% பேரை இதுவரை அதிகாரப்பூர்வ குடிமக்களாக ஜேர்மனி அங்கீகரித்துள்ளது.

ஜேர்மன் குடியுரிமை பெற்ற துருக்கியர்கள் 3,597 பேர். துருக்கியை அடுத்து போலந்து, உக்ரைன் ஆகிய நாடுகள் உள்ளன. இந்த வரிசையில் பிரித்தானியா 10-வது இடத்தில் உள்ளது.

ஜேர்மனியில் மட்டுமின்றி பிரித்தானியர்கள் பிரான்ஸ் குடியுரிமை கோரியும் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2016 ஆம் ஆண்டு மட்டும் லண்டனில் அமைந்துள்ள பிரான்ஸ் தூதரகத்தில் விண்ணப்பித்துள்ளவர்களின் எண்ணிக்கை 40% அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் ஜேர்மனி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Comments